சென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்!
சென்னை : ஜீவா நடிப்பில் சைபர் க்ரைமை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'கீ' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அடுத்து டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஜீவா.
ஜீவா நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் வெற்றி பெறாததால் தனது மார்க்கெட்டை தக்கவைக்கப் போராடி வருகிறார். 'கொரில்லா' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக 'அர்ஜூன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்.

'கொரில்லா' படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் தொடங்கியது. ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரித்து வரும் இந்தப் படத்தில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சிம்பன்ஸி குரங்கு ஒன்று முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதியில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நார்த் மெட்ராஸ் போல அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்கும் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் முடிவடைந்தவுடன் 'கொரில்லா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











