Don't Miss!
- News
மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து பிளவை உருவாக்குகிறார்கள்.. டெல்லி என்.சி.சி.விழாவில் பிரதமர் மோடி
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வெங்கட் பிரபுவுடன் கூட்டணி… வில்லன் அவதாரம்… நாக சைதன்யாவுடன் மோத காத்திருக்கும் ஜீவா!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவின் 'NC 22' படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
நாகை சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கும் NC 22 படத்திற்கு இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்நிலையில் NC 22 படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, பிரியாமணி, பிரேம்ஜி ஆகியோரும் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரீல்ஸ்
வார்த்தை
யூஸ்
பண்ணா
தப்பா?தனலட்சுமியை
வெளுத்துவாங்கிய
வனிதா!

VP 11 - NC 22
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி வசூலை கடந்தது. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மன்மத லீலை' திரைப்படமும் வெளியானது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் 22வது படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. நாக சைதன்யாவின் 22வது படமான இது 'NC 22' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. இது வெங்கட் பிரபுவின் 11வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமான ரோலில் சரத்குமார்
நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கும் இந்தப் படத்திற்கு, இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சரத்குமார் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இறை வெப் சீரிஸ், பொன்னியின் செல்வன், விஜய்யுடன் 'வாரிசு' படங்களில் நடித்ததன் மூலம் மீண்டு டைம் லைனில் வந்த சரத்குமார், முதன்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் சாமி, பிரியாமணி, பிரேம்ஜி
அதேபோல், NC 22 படத்தில் ஸ்டைலிஷ் நடிகரான அரவிந்த் சாமியும் கமிட் ஆகியுள்ளார். இவருக்கும் வெங்கட் பிரபுவுடன் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியாமணி, பிரேம்ஜி, சம்பத் ராஜ், தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர், சீரியல் நடிகை பிரேமி விஸ்வநாத் ஆகியோரும் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெங்கட் பிரபுவின் படங்களில் எப்போதுமே ஸ்டார் காஸ்டிங் சிறப்பாக இருக்கும். 'NC 22 படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, பிரியாமணி, பிரேம்ஜி என வெரைட்டியான நடிகர்கள் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

வில்லனாகும் ஜீவா?
இந்நிலையில், NC 22 படத்தில் வில்லனாக நடிக்க ஜீவா கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஜீவா, கடந்த சில மாதங்களாக அதிகமான பட வாய்ப்புகள் இல்லாமல் காணப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'காஃபி வித் காதல்' படமும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் NC 22 படத்தில் நாக சைதன்யாவுக்கு வில்லனாக ஜீவா நடிக்கலாம் என்ற தகவல் ரசிகர்களிடம் தீயாக பரவி வருகிறது. எந்த கேரக்டர் என்றாலும் தனக்கான தனித்துவமான நடிப்பால் அசர வைக்கும் ஜீவா, வில்லன் கேரக்டரில் எப்படி மாஸ் காட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். NC 22 படத்தில் ஜீவா நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
-
ரிசார்ட் ஓனருடன் கீர்த்தி சுரேஷ் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அம்மா!
-
கர்ப்ப வயிற்றுடன் கடலில் குளிக்கும் பூஜா ராமசந்திரன்.. பிகினி உடையில் இப்படியா போஸ் கொடுப்பாங்க!