Black Box Office Day 4: மக்கள் பாராட்டில் ஜீவாவின் பிளாக்.. வசூலில் கெத்து காட்டி அசத்தல்
சென்னை: கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீ-மேக் படமான பிளாக் படம் கடந்த 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் நிறைந்த காட்சிகளாலும் பல்வேறு ட்விஸ்ட் அண்ட் ட்ரன்ஸ் உடன் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் மிகப்பெரிய பலமாக சாம். சி.எஸ்-இன் இசை இருக்கின்றது. படம் ரிலீஸ் ஆன பின்னர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு ஆதரவு கூடிக்கொண்டே போனதால் வார இறுதி நாட்களில் நல்ல வசூல் குவித்தது. இந்நிலையில் நேற்று வாரத்தின் தொடக்க நாள் என்பதால், நேற்று படத்தின் வசூல் சுமாராகவே இருந்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ராம், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜீவா. நடிகர் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸின் உரிமையாளரான ஆ.பி. சௌத்ரியின் மகன் ஆவார். நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்றே கூறவேண்டும். முழுக்க முழுக்க ராவான படங்களின் கதை என்றாலும் ஜாலியான கமர்ஷியல் படம் என்றாலும் கச்சிதமாக பொருந்திப் போகக்கூடியவர் என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார். மேலும் இவரது நடிப்பு பல படங்களில் பாராடைப் பெற்றுள்ளது. குறிப்பாக ராம், கற்றது தமிழ், ஈ போன்ற படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் பர்ஃபாமிங் ஆர்ட்டிஸ்ட் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தது.

அதன் பின்னர் சிவா மனசுல சக்தி, டிஷ்யூம், தெனாவட்டு போன்ற கம்ர்ஷியல் படங்களிலும் நடித்து மார்கெட் உள்ள நடிகராக வடிவமைத்துக் கொண்டார். இவர் நடித்த படங்களில் பல படங்கள் எவர் க்ரீன் எனக் கூறலாம். குறிப்பாக கோ, என்றென்றும் புன்னகை, சிவா மனசுல சக்தி, நண்பன் உள்ளிட்ட படங்கள் அந்த வரிசையில் சேரும். இதில் சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என இயக்குநர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
பிளாக்: இவரது நடிப்பில் கடந்த 11ஆம் தேதி பிளாக் படம் ரிலீஸ் ஆனது. கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீ-மேக். படத்தில் ஒரு சில காட்சிகள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தினை இயக்குநர் கே ஜி பாலசுப்பிரமணி இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பெரும்பாலும் படம் இவர்கள் இருவரை மையப்படுத்தி மட்டுமே நகர்வதால் இருவரும் படம் முழுவதும் வருகின்றனர். அதேபோல் இவர்களுடன் விவேக் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் என பலர் நடித்துள்ளனர். திகிலூட்டும் காட்சிகள் அதிகம் இருந்தாலே இயக்குநர்களின் முதல் தேர்வாக இப்போதெல்லாம் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இருக்கின்றார். அவர்தான் இந்தப் படத்திற்கும் இசை அமைத்து பயத்தை இருமடங்காக மாற்றியுள்ளார்.

ப்ரியா பவானி சங்கர்: மேலும் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவரது நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. இதனால் தொடர் பாராட்டு மழையில் உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் இருக்ககூடிய நன்கு தமிழ் தெரிந்த மற்றும் சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவர். ஆனால் இவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடாததால் இவரை ராசியில்லாத நடிகை என சிலர் முத்திரை குத்தப் பார்த்தனர். ஆனால் தனது அட்டகாசமான நடிப்பு மற்றும் கதைத் தேர்வினால் அடுத்தடுத்த ஹிட் கொடுத்துள்ளார் பிரியா. டிமான்ட்டி காலனி 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் பிளாக் படம் வெளியாகியுள்ளது. பிளாக் படமும் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பெறவுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேறு படங்கள் ரிலீஸ் ஆகாது என்பதால் ப்ளாக் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

வசூல்: ஏற்கனவே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் தியேட்டர்கள் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. படம் முதல் மூன்று நாட்களில் படம் ரூபாய் 3.25 கோடிகளை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் தியேட்டருக்கு வருவது குறைந்துள்ளது. இப்படியான நிலையில், படம் நான்காவது நாளில் ரூபாய் 50 லட்சங்கள் தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. முதல் நான்கு நாட்களில் படம் ரூபாய் 3.75 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











