பாலிவுட் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜீவாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
சென்னை: பாலிவுட்டில் உருவாகியுள்ள '83' படத்தில் கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை போற்றும் விதத்தில் '83' என்ற படத்தை பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்கி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தமிழக கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்து வருகிறார்.

ஸ்போர்ட்ஸ் படம்
பயோபிக் படங்களுக்கும், ஸ்போர்ட்ஸ் படங்களுக்கும் இந்தியாவில் திடீர் மவுசு அதிகரித்துள்ளது. கேப்டன் தோனியின் பயோபிக் படமான எம்.எஸ். தோனி படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தது. மேரி கோம், சாய்னா நேவால் உள்ளிட்ட பல விரர்களின் பயோபிக் படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், ‘83' என்ற ஸ்போர்ட்ஸ் படமும் உருவாகி வருகிறது.

83
1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் கபீல் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அந்த நிகழ்வை மையப்படுத்தி ‘83' எனும் தலைப்பில் 105 கோடி பட்ஜெட்டில் கபீர் கான் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்கி வருகிறார்.
வைரலான ஃபர்ஸ்ட் லுக்
ஹரியானா ஹரிகேன் கபீல் தேவின் லுக்கில் அசத்தலாக உருமாறிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் கபீல் தேவ் ஃபர்ஸ்ட் லுக் உலகளவில் வைரலானது.
சீக்கா மச்சா
தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்தை சீக்கா என செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். கிருஷ்ணமாச்சார்யாவாக நடிகர் ஜீவா நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது ரன்வீர் சிங் ட்விட்டரில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
செம்மையா மேட்ச் ஆகுது
கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவாவின் லுக் செம்மையா மேட்ச் ஆகுது என ரசிகர்கள் இருவரது லுக்கையும் அருகே அருகே வைத்து பாராட்டி வருகின்றனர்.

எத்தனை மொழிகளில்?
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று படங்களில் ‘83' படம் வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹில் கட்டார், சாகிப் சேலம் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர்.

சீறு எப்போ?
ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு கீ மற்றும் கொரில்லா என இரண்டு படங்கள் வெளியானது. ஆனால், இரண்டு படமே படு தோல்வியை சந்தித்தன. சீறு படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னமும் வெளியாகவில்லை.

ஜிப்ஸி ரிலீஸ்
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை பிரச்சனைகள் தீர்ந்த நிலையில், ஜிப்ஸி படம் தியேட்டர்களில் இந்த முறை கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











