தமிழில் மெகா ஹிட்டடித்த தலைவர் தம்பி தலைமையில்.. ஹிந்தியில் ரீமேக்.. பெரிய கைதான் படத்தை வாங்கிருக்காரு
சென்னை: ஜீவா நடிப்பில் நிதிஷ் சகாதேவ் இயக்கிய தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெற்றியை பெற்றது. பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தி வா வாத்தியார் படங்கள் ரிலீஸாகியிருந்தாலும் இப்படம் அசால்ட்டாக பந்தயம் அடித்தது. இந்நிலையில் இப்படமானது ஹிந்தியில் ரீமேக்காகவிருக்கிறது. பெரிய கை படத்தை வாங்கியிருக்கிறார்.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் ஜீவா. கரியரை ஆரம்பித்த சில வருடங்களிலேயே ராம், ஈ, கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களில் நடித்து தன்னை நிரூபித்தவர். ஒருபக்கம் ஆர்ட் ஃபிலிம்களை அவர் செய்தாலும் மறுபக்கம் கமர்ஷியல் ரீதியாக சிவா மனசுல சக்தி, தெனாவட்டு என கலந்துகட்டி அடித்தார். இரட்டை குதிரைகளில் லாவகமாக பயணம் செய்ய தெரிந்த தமிழ் ஹீரோ என்றும் பெயர் எடுத்தார்.
திடீர் சறுக்கல்: சரியாக ஜீவா பீக்கில் இருந்த சமயத்தில் எல்லாம் சிம்பு ஃபார்மிலேயே இல்லை. எனவே கோலிவுட் ரேஸில் சிம்புவையே முந்தும் அளவுக்கு அவரது வேகம் இருந்தது. அதற்கேற்றபடி கோ, என்றென்றும் புன்னகை என ஹிட் படங்களில்தான் நடித்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை தொடர்ந்து அடி வாங்கினார். இவர் வீழ்ந்த கேப்பில் இவருக்கு ஜூனியரான சிவகார்த்திகேயன் எல்லாம் இவரை ஓவர்டேக் செய்து நிலைமையும் உருவாகிவிட்டது.

கம்பேக் கொடுத்த ஜீவா: படங்கள் தோல்வியை சந்தித்தாலும் வரிசையாக நடித்துக்கொண்டே இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்தார். இதில் அவருடன் இளவரசு, தம்பி ராமைய்யா, பிரார்த்தனா, ஜென்சன் திவாகர் நடித்திருந்தார்கள். மொத்தமே படத்தில் நூறு பேர்தான் நடித்திருப்பார்கள். லொக்கேஷன் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வீடுகள், ஒரு தண்ணீர் தொட்டி அவ்வளவுதான்.
5 கோடி ரூபாய்தான் பட்ஜெட்: படத்துக்கு மொத்தமே ஐந்து கோடி ரூபாய்தான் பட்ஜெட் என்றும் சொல்லப்பட்டது. இவ்வளவு சிம்ப்பிளாக எடுக்கப்பட்டு பெரிய சம்பவத்தை செய்துவிட்டது படம். பொங்கல் ரேஸில் ஏற்கனவே பராசக்தி, வா வாத்தியார் இருந்தன. படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததால் அந்த ரேஸில் படம் களமிறக்கப்பட்டது. அந்தப் படங்களை விடவும் இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று பார்த்தார்கள். பல நாட்கள் செகண்ட் ஷோவே ஹவுஸ்ஃபுல்லாகும் நிலைமைதான் நீடித்தது.
ஹிந்தியில் ரீமேக்காகும் படம்: வசூலிலும் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டது. கோடம்பாக்கத்தில் வெற்றி விழாவை உண்மையிலேயே கொண்டாடிய படமாக TTT அமைந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்தில் பார்த்தார். படம் ரொம்பவே பிடித்துவிட்டது. எனவே உடனடியாக அதன் ரைட்ஸை வாங்கிவிட்டார். தொடர்ந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளிலும் இறங்கவிருக்கிறார். கோலிவுட்டில் அதிர்வுகளை ஏற்படுத்திய மாதிரி பாலிவுட்டிலும் தலைவர் தம்பி தலைமையில் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











