»   »  ஜெமினி ட்ராப்... உள்ளதும் போச்சே ஜீவாவுக்கு!

ஜெமினி ட்ராப்... உள்ளதும் போச்சே ஜீவாவுக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜீவா நடித்து கடைசியாக ஓரளவு ஓடிய படம் என்றென்றும் புன்னகை. அந்தப் படம் ஓடியதற்கு ஜீவா மட்டுமே காரணம் இல்லை என்றாலும், ஹீரோ என்ற முறையில் அவரது மார்க்கெட் ஓரளவு முன்னேற்றம் கண்டது.

அவ்வளவுதான்... சரேல் என சம்பளத்தை தாறுமாறாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார் ஜீவா. அவரது அப்பா சவுத்திரியிடம் கேட்டால், "எங்கப்பா... என் பேச்சையே கேக்கறதுல்ல.. ஏகத்துக்கும் சம்பளம் கேக்குறான்... நீங்களே பேசிக்குங்க" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

Jiiva's Gemini Ganesan dropped

இப்படி இறுமாப்போடு ஜீவா இருந்த நேரத்தில்தான் முதல் அடியாக யான் டப்பாவுக்குள் போனது. அடுத்து போக்கிரி ராஜா. இந்தப் படத்துக்கு கிடைத்த தோல்வி ஜீவாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது.

அவரை வைத்து படமெடுக்கவிருந்த இரண்டு இயக்குநர்கள் சத்தமின்றி கழன்று கொள்ள, ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்த ஜெமினி கணேசன் படமும் நின்று போய்விட்டது.

இப்போது ஜீவாவுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை திருநாள். நயன்தாரா ராசியில் அந்தப் படம் ஓடினால்தான் ஜீவாவுக்கு எதிர்காலம்!

English summary
Jiiva's Gemini Ganesan movie has been dropped due to the actors disastrous Pokkiri Raja.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos