ஜிப்ஸி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பட்டையை கிளப்பிய ராஜுமுருகன்

By Siva

Recommended Video

ஜிப்ஸி : ஒரு நாடோடியுடன் குதிரையும் காதலியும்...வீடியோ

சென்னை:ஜீவா நடித்து வரும் ஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜோக்கர் படத்தை அடுத்து ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மிஸ் இமாச்சல பிரதேசம் பட்டம் வென்ற நடாஷா சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஜிப்ஸி

ஜிப்ஸி

ஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. போஸ்டர்களை பார்த்தாலே ராஜுமுருகன் இந்த படத்திலும் தனது முத்திரையை பதித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெறுவார் என்பது தெளிவாக தெரிகிறது.

பயணம்

பயணம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்க்கும்போது ஜீவா ஊர், ஊராக சுற்றித் திரியும் வாலிபர் என்பது புரிகிறது. பயணத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு பிரேக் கிடைக்காமல் இருக்கும் ஜீவாவுக்கு இந்த படம் நிச்சயம் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

ஜிப்ஸி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஜிப்ஸி என்பது பயணம் பற்றிய கதை. இந்த படத்திற்காக ஜீவா சார் நீளமான முடி வளர்த்துள்ளார். மேலும் கிட்டார் வாசிக்க கற்றுக் கொண்டுள்ளார். படம் முழுக்க அவருடன் குதிரை வரும் என்கிறார் ராஜு முருகன்.

சமூக பிரச்சனை

சமூக பிரச்சனை

ஜிப்ஸி படத்திற்கு லொகேஷன் பார்க்க நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். காஷ்மீர், டெல்லி மற்றும் பல நகரங்களில் நாடோடிகளை பார்த்தேன். அவர்களிடம் இருந்து சில விஷயங்களை எடுத்துக் கொண்டேன். இந்த படத்தில் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளோம் என்று ராஜு முருகன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X