twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீவாவின் ஜிப்ஸி தப்பித்ததா? இல்லையா? என்ன சொல்கிறது ட்விட்டர் விமர்சனம்?

    |

    சென்னை: இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

    Recommended Video

    மொத்தம் 50 சென்சார் cut | GYPSY AUDIENCE RESPONSE | FILMIBEAT TAMIL

    குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில், மதம், அரசியல், காதல் என பல விஷயங்களை கலந்து உருவாகி உள்ள ஜிப்ஸி திரைப்படம், சென்சார் போர்டில் பலமாக சிக்கியது.

    பாதி படத்துக்கு மேல் கத்தரி போட்டதாகவும், ரீஷூட் எடுத்து வேறு ஒரு படமாக தற்போது ஜிப்ஸி வெளியாகி இருக்கிறது என எழுந்துள்ள ட்விட்டர் விமர்சனங்களை இப்போது காணலாம்.

    போல்டான கதை

    காதல் மற்றும் அரசியல் கலந்த ஒரு எமோஷனலான படம் ஜிப்ஸி. இப்படியொரு போல்டான கதையை எழுதி, இயக்கியதற்காக இயக்குநர் ராஜு முருகனுக்கு பாராட்டுக்கள். நடிகர் ஜீவாவின் சிறந்த நடிப்பு ஜிப்ஸியில் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

    120 ரூபா வேஸ்ட்

    ஜிப்ஸி படத்தின் மேக்கிங் ஷார்ட் பிலிம் மேக்கிங் போல மிகவும் சுமாராக இருப்பதாகவும், சென்சாரில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டதால், அந்த காட்சிக்கு பதிலாக, அவசர அவசரமாக வேறு சில காட்சிகளை எடுத்து, திணித்துள்ளனர் என்றும், படமாடா இது, 120 ரூபா வேஸ்ட் என்றும் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

    மனிதம் போற்றுவோம்

    குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்படும் மத கலவரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஜிப்ஸி படம் உருவானது என்றும், இந்த ஜிப்ஸி படம் உருவாக காரணமானவர்கள் இவர்கள் தான் என்றும், ஜிப்ஸி பட இயக்குநர் ராஜு முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், மனிதம் போற்றுவோம் என்று பதிவிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

    மனிதம் தாண்டி புனிதம் இல்லை

    இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜிப்ஸி படத்தின் மைய கருத்தான மனிதம் தாண்டி புனிதம் இல்லை என்பதை மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா.. இதயம் தாண்டி இறைவன் இல்லை வா.. என சந்தோஷ் நாராயணன் பாடலாக உருவாக்கியது குறித்தும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    சங்கிகளுக்கு

    ஜிப்ஸி, இந்த வருடத்தில் வந்த படங்களிலேயே தரமான படம்.. நடிகர் ஜீவா இந்த படத்தில் நடித்தற்கே அவரை பாராட்டலாம். வசனம் ஒவ்வொன்னும் சங்கிகளுக்கு செருப்படி.. சந்தோஷ் நாராயணன் மியூசிக் தெய்வ லெவல் என ஜிப்ஸி படத்திற்கு இப்படியொரு பாராட்டு பத்திரத்தை இந்த ரசிகர் கொடுத்துள்ளார்.

    சுவாரஸ்யம் இல்லை

    ஜிப்ஸி திரைப்படம் நாடோடி மூவிக்கான ரூட் மேப் கச்சிதம்.. ஆனால், குதிரையின் மீது உட்கார்ந்தும் பயணத்தில் சுவாரஸ்யம் மிஸ்ஸிங் என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஜாதி, மதங்கள் காதலுக்கு முன்பு இல்லை என்பதை தேசிய அரசியல் கலந்து சொல்லி இருக்கும் ஜிப்ஸி படம் தியேட்டர்களில் தாக்கு பிடிக்குமா? என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

    English summary
    After Cuckoo and Joker now Director Raju Murugan comes up with a Political – Love movie Gypsy. Gypsy got mixed reviews from the netizens.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X