அந்த தேதியில் ஜீவாவின் சீறு ரிலீசாகிறதா.. அப்போ கெளதம் மேனன் படம் எப்போ சார் ரிலீஸ்?
சென்னை: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள சீறு படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி ரிலீசாகுது.
நாளை அந்த படத்தில் இடம்பெற்றுள்ள "வா வாசுகி" பாடல் வீடியொ வெளியாகிறது. தற்போது அந்த பாடலின் புரொமோ வீடியோ வெளியாகி ஜீவா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து கொடுத்துள்ளது.
மேலும், இம்மாத இறுதியில் ஜீவாவின் ஜிப்ஸி படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட் ரிலீஸ்
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்தை இயக்கிய ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், வருண், சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள சீறு படம் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீறு படத்தின் ரிலீஸ் கடைசி நேரத்தில் தள்ளிப் போனது. தற்போது வரும் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலர் தின கொண்டாட்டம்
பிப்ரவரி 14ம் தேதி வரும் காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜீவாவின் சீறு படம் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது. ரொமான்ஸ், ஆக்ஷன் என மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள சீறு படம் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 சொதப்பியது
நடிகர் ஜீவாவுக்கு கடந்த 2019ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் சொதப்பியது. அவரது நடிப்பில் வெளியான கொரில்லா மற்றும் கீ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. மேலும், ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட சீறு மற்றும் ஜிப்ஸி படங்கள் இறுதி வரை ரிலீஸ் பிரச்சனையை சந்தித்தன.

2020 எப்படி
2020ம் ஆண்டு ஆரம்பமே ஜீவாவுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிப்ஸி படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த மாதமே சீறு படமும் திரைக்கு வருகிறது. மேலும், பாலிவுட் படமான 83 படமும் ஜீவாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை இந்தியளவில் தரும் என தெரிகிறது.

ஜோஷ்வா இமை போல் காக்க
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள சீறு படம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் காதலர் தின கொண்டாட்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ஜோஷ்வா இமை போல் காக்க படம் எப்போது வெளியாகும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

’பப்பி’ வருண்
பப்பி படத்தின் நாயகனான வருண் சீறு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவர் ஹீரோவாக நடித்துள்ள ஜோஷ்வா திரைப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த படமும் லேட் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

சுமோ எப்போ வரும்?
பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த சிவாவின் சுமோ திரைப்படமும் இன்னும் வெளியாகவில்லை. சீறு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக சுமோ படத்தை ரிலீஸ் செய்கிறதா? அல்லது ஜோஷ்வா படத்தை ரிலீஸ் செய்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











