ஜீவாவுக்கு கம்பேக் கிடைத்ததா.. சீறு படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Recommended Video

ஜீவாவுக்கு கம்பேக் கிடைத்ததா.. சீறு படம் எப்படி இருக்கு? | Seeru Movie Reviews - Public Opinions

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியாகியுள்ள சீறு படம், நட்பு, குடும்பம், பாசம் என கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜீவாவின் படங்களான கீ மற்றும் கொரில்லா படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், தற்போது வெளியாகி உள்ள சீறு படம் குறித்து ட்விட்டர் வாசிகள் என்ன சொல்றாங்க என்பதை இங்கே காண்போம்.

முதல் பாதி சூப்பர்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், நவ்தீப், வருண் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள சீறு படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர் என படத்தின் முதல் பாதியை பார்த்த நிலையில், இந்த தனுஷ் ரசிகர் தனது ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனம்

விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள சீறு படம் இன்று வெளியாகி உள்ளது. காலை 8 மணிக்கு முதல் காட்சி ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்துக்கு பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் வருவதாகவும், ஜிப்ஸி படத்துக்கு முன்னாடியே ஜீவாவுக்கு கம்பேக் கொடுத்துள்ளதாக இந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

சீறு.. சீறப்போகுது

ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள சீறு படம் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதியே திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில், இன்று சீறு படம் வெற்றிகரமாக 400க்கும் மேற்பட்ட தியேட்டரில் ரிலீசாகியுள்ளது. சீறு.. சீறப்போகுது என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

திருப்பாச்சி ரீலோடட்

சினிமா விமர்சகர் கெளசிக், சீறு படம் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தை ரீலோடட் செய்தது போல செம்ம மாஸாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், 2 மணி நேர படமாக க்ரிஸ்ப்பாகவும் ஆக்‌ஷன் காட்சிகள் கலந்து ரேஸியாகவும் இருக்கிறது என தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஜீவா கம்பேக்

ஜீவாவுக்கு கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய படங்கள் மற்றும் வெற்றிகள் அமையவில்லை. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள சீறு படம் பக்கா ஆக்‌ஷன் படமாக அமைந்துள்ளது. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜீவா கம்பேக்னு சொல்ற மொமண்ட்... நீங்க சாதிச்சிட்டீங்க ப்ரோ என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X