twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பிடித்த ஜீவாவின் ‘சீறு’.. முதல் வார கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

    |

    Recommended Video

    SEERU MOVIE POSTER PAKIRI REVIEW | FILMIBEAT TAMIL

    சென்னை: ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சீறு திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    ஜீவா, ரியா சுமன், நவ்தீப், வருண், சதீஷ், காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி சீறு திரைப்படம் திரைக்கு வந்தது.

    Jiiva’s Seeru spotted first place in Chennai Box Office!

    முதல் வார முடிவில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் சீறு படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தை போல தங்கச்சி சென்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என மாஸ் கமர்ஷியல் படமாக சீறு உருவாகி இருக்கிறது.

    றெக்க படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரத்ன சிவா பல ஏரியாக்களில் தனது இயக்கத்தை மெருகேற்றி ஸ்கோர் செய்துள்ளார்.

    இமான் இசையில் வா வாசுகி, செவ்வந்தியே பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.

    சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரப்படி முதல் மூன்று நாட்களில் சீறு படம் சுமார் 1 கோடி வசூலை ஈட்டி முதலிடத்தை பிடித்துள்ளது.

    தளபதி 65 படத்தின் இயக்குநர் இவர் தானா.. வைரலாகும் தகவல்கள்.. சன் பிக்சர்ஸ் சீக்கிரம் சொல்லிடுங்க!தளபதி 65 படத்தின் இயக்குநர் இவர் தானா.. வைரலாகும் தகவல்கள்.. சன் பிக்சர்ஸ் சீக்கிரம் சொல்லிடுங்க!

    தமிழ்நாடு முழுவதும் சீறு படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சீறு படத்தை வெளியீட்டு நல்ல வசூலை ஈட்டியுள்ளார்.

    சீறு படத்தைத் தொடர்ந்து சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் இரண்டாவது இடத்தில் வானம் கொட்டட்டும் படமும், முன்றாவது இடத்தில் ஹாலிவுட் படமான பேர்ட்ஸ் ஆஃப் பிரே படம் இடம்பிடித்துள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராம் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் மிரட்டிய சைக்கோ திரைப்படம் இந்த வாரம் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த சவுண்ட் மிக்ஸிங் என மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்ற 1917 திரைப்படம் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

    இந்த வார இறுதியில் ஓ மை கடவுளே, நான் சிரித்தால், அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், இந்த பாக்ஸ் ஆஃபிஸ் டாப் 5 இடங்கள் பெரிய மாற்றத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    After Seeru, Jiiva will be seen in “83,” his debut Bollywood film. This is nothing but the celebration of India’s first Cricket World Cup in 1983.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X