தூள் கிளப்பும் சீறு டிரைலர்… மிஸ்ஸான இடத்தை மீண்டும் பிடிப்பாரா ஜீவா!
சென்னை: ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள சீறு படத்தின் அதிரடி ஆக்ஷன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிப்புலக அசுரன் தனுஷ் இந்த டிரைலரை வெளியிடுவார் என இன்று காலை வேல்ஸ் பிலிம் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதே போல சரியாக 12 மணிக்கு சீறு படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா தற்போது ஜீவாவின் சீறு படத்தை இயக்கியுள்ளார்.
டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் தற்போது வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரியா சுமன் நடித்துள்ளார்.
அறிந்தும் அறியாமலும் படத்தில் நாயகனாக அறிமுகமான நவ்தீப் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், பப்பி படத்தின் ஹீரோ வருணும் இந்த படத்தில் நெகட்டிவ் ரோல் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் இமானின் பிறந்த நாளான இன்று அவர் இசையில் உருவாகியுள்ள சீறு படத்தின் டிரைலர் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பு.
கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கீ, கொரில்லா படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பதிவு செய்யவில்லை. இந்த ஆண்டு ஜீவாவின் சீறு, ஜிப்ஸி மற்றும் பாலிவுட் படமான 83 ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளதால், ஜீவா மீண்டும் தனது இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











