விஜய் குறித்த கேள்வி.. நோ கமெண்ட்ஸ்னு சொன்ன நடிகர் ஜீவா.. இது தனியா பத்திக்கிச்சே பாஸ்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இதில் தனது ஜன நாயக கடமையை செய்த நடிகர் ஜீவா அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று பதில் அளித்தது பேசு பொருளாக மாறியுள்ளது.

வாக்களித்து விட்டு வந்த நடிகர் ஜீவா செய்தியாளர்களைச் சந்திக்கையில், " வாக்களிப்பது குறித்து அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது அனைவரது கடமை மற்றும் உரிமை. நல்ல குடிமகனுக்கு அடையாளமாக நான் எனது வாக்கினைச் செலுத்தி உள்ளேன். இளைஞர்கள் அவர்களின் சௌகரியமான சூழலில் இருந்து வெளிவந்து, அதிகப்படியாக வாக்கு செலுத்தினால், நமது மாநிலத்தின் நிலை மிகவும் நன்றாக இருக்கும்.

Jiiva Says No Comments on Vijay Sparks Online Buzz tn election 2026

இந்த தேர்தல் மட்டுமல்ல, அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியமானது தான். மாற்றம் என்பது குறித்து நாம் இப்போது பேச முடியாது, மக்கள் அனைவரும் இணைந்து என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்து, மே 4 அன்று தான் தெரியவரும். எனக்கென்று தனி கோரிக்கை எல்லாம் எதுவும் இல்லை, அதுபோல நான் யோசிக்கவும் இல்லை. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும், அவர்களுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

விஜய் குறித்த கேள்வி: அதேபோல் இலவசங்கள் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த இரண்டு கேள்விகளுக்குமே, " நோ கமண்ட்ஸ்" என்று பதில் அளித்தார். இவரது இந்த பதில் பேசு பொருளாக மாறியது மட்டும் இல்லாமல், விஜய் ரசிகர்கள் தரப்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Jiiva Says No Comments on Vijay Sparks Online Buzz tn election 2026

ரசிகர்கள்: அதிலும் சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாக்கைச் செலுத்த வரும் போது, வெள்ளை நிற சட்டை அல்லது டீசர்ட் மற்றும் வெளிர் காக்கி நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தால், அந்த பிரபலங்கள் விஜய்யின் தவெகவுக்கு ஆதரவானவர்கள் என்றும் இப்படி ஆடை அணியாமல் வேறு நிறங்களில் ஆடை அணிந்து வந்தவர்கள் தவெகவுக்கு எதிரானவர்கள் என்றும் இணையத்தில் பிரித்துப் பேசி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X