விஜய் அண்ணாவிற்கு தேங்க்ஸ்.. நான் பெருமையா சொல்ல பல படங்கள் என்கிட்ட இருக்கு.. ஜீவா பேட்டி!
சென்னை: நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் ஜனவரி 15ந் தேதி வெளியானது. விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படம் சிறப்பாக வசூலை அள்ளி வருகிறது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, படத்தில் வரும் ஒரு காட்சியை விஜய் அண்ணாவிற்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக திட்டமிட்டபடி வெளியாக வில்லை. பராசக்தி படம் ஜனவரி 10ந் தேதி வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிது. ஆனால்,பொங்கல் விடுமுறைக்கு தொடர் விடுமுறை இருப்பதால், ஜனவரி 30ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த 'தலைவர் தம்பி தலைமையில்' சில நாட்களுக்கு முன்பாக ஜனவரி 15 அன்று வெளியானது.

தலைவர் தம்பி தலைமையில்: இப்படம் நன்றாக இருப்பதால் எங்கு பார்த்தாலும் தலைவர் தம்பி தலைமையில் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. படம் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, 14 வருடங்களுக்கு முன் விஜய் அண்ணாவுடன் நண்பன் படத்தில் நடித்தேன். அந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. அதன் பின் 14 வருடங்கள் கழித்து 'தலைவர் தம்பி தலைமையில்' படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு காட்சி வரும் அதாவது 'தேங்க்ஸ் நண்பன்' என்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சி விஜய் அண்ணாவிற்கு தான், அந்த காட்சியை விஜய் அண்ணாவிற்கு டெடிகேட் செய்கின்றோம் என்றார்.
விஜய் அண்ணாவிற்கு தேங்க்ஸ்: தொடர்ந்து பேசிய ஜீவா, ராம், கற்றது தமிழ், ஈ, SMS, கோ, டிஷ்யூம் போன்றவை எனக்குபிடித்தமான படம், சில பேருக்கு டேவிட், கவலை வேண்டாம், ஜிப்ஸி படங்களையெல்லாம் பிடிச்சிருக்கு. இந்தக் காலகட்டத்துல மார்க்கெட்டிங் ரொம்ப அதிகமா இருக்கு. ஆனால், ஒரு விஷயத்தைச் செயற்கையாக வளர்வது எனக்குப் பிடிக்காது. படம் நல்லா இருந்தா அதுவாவே இருந்தாலும் ஓடும். ஒரு நடிகராக நான் பெருமையா சொல்லிக்கிறதுக்கு என்னிடம் 10 முதல் 15 படங்கள் இருக்கு என்றார். நடிகர் ஜீவாவுக்கு 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் ஒரு 'கம்-பேக்' திரைப்படமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











