தமிழ்படம் பார்ட் 2 வில் ஜீவா!
Recommended Video

தமிழ் படத்தில் வச்சு செஞ்ச இயக்குனர்..!!
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி தமிழ் சினிமாவை பரபரப்பாகப் பேச வைத்த படம் தமிழ்படம். அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.
முந்தைய பாகத்தின் ஹீரோ சிவாவே இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். முந்தைய பாகத்தில் வில்லனின் அடியாளாக இருந்த சதீஷ் புரமோஷன் ஆகி மெயின் வில்லனாகி இருக்கிறார்.

தமிழ் படம் முதல் பாகத்தில் சதீஷை அடையாளம் காண முடியாதபடி தாடி, முடி கெட்டப் போட்டிருந்தார்கள். இந்த பாகத்தில் அவர்தான் மெயின் என்பதால் பல கெட்டப்களாம். கேங் லீடர் முதல் அரசியல்வாதி வரை பல கெட்டப்கள்.
தமிழ் படம் 2 வில் கேமியோ ரோலில் ஜீவா வருகிறாராம். ஜீவா வரும் காட்சியும் ரசிகர்களை சிரிக்க வைக்குமாம். அனேகமாக அது ராஜேஷ் பட பாணியில் க்ளைமாக்ஸ் காட்சியாக இருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications