TTT Day 6 Box Office: பொங்கல் வின்னர்னு உறுதி ஆயிடுச்சு.. பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் TTT
சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில், மலையாள இயக்குநர் நிதீஷ் சஹாதேவ் இயக்கிய 'தலைவர் தம்பி தலைமை' (TTT) திரைப்படம், கடந்த 15ஆம் தேதி ரிலீஸ் ஆகி பொங்கல் ரேஸில் களமிறங்கியது. ஒரு அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ள இப்படம், பொங்கல் 2026 திரைப்படப் போட்டியில் எதிர்பாராத வெற்றிப் படமாக உருவெடுத்து, வெளியான ஆறே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தகுந்த வசூலை அள்ளி உள்ளது.
இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரை, தலைவர் தம்பி தலைமையில் படம் ஆறாவது நாளில் ரூபாய் 20 கோடி வசூலை கடந்துள்ளது. தாண்ட தயாராக உள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில், TTT திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூபாய் 22.5 கோடிக்கும் அதிகமான வசூலை பதிவு செய்தது. இதன் அடிப்படையில் படத்திற்கு உலக அளவில் ஆறாவது நாளில் ரூபாய் 25 கோடியை நெருங்கிவிட்டது.
தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் போக்குகளைக் கருத்தில் கொண்டால், 'தலைவர் தம்பி தலைமை' வெளியாகி முதல் பத்து நாட்களுக்குள் உலகளவில் ரூபாய் 50 கோடி வசூலை எட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.

கதை: திரைப்படத்தின் கதை, ஒரு சிறிய நகரத்தின் உள்ளூர் அரசியல்வாதியான ஜீவரத்னம் என்பவரைச் சுற்றி நகர்கிறது. இளவரசுவின் வீட்டில் நடக்கும் திருமண விழாவை எந்தவித இடையூறும் இன்றி நடத்தி வைக்கும் பொறுப்பு ஜீவரத்னத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றாலும், அக்கம் பக்கத்தில் நிகழும் எதிர்பாராத மரணம் ஒன்று மொத்த சூழ்நிலையையும் தலைகீழாக மாற்றுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள்: 'தலைவர் தம்பி தலைமை' படத்தில் ஜீவா, நாயகனான ஜீவரத்னம் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். இவருடன் பிரதாப நாதன், தம்பி ராமையா, மீனாட்சி தினேஷ், அமித் மோகன் ராஜேஸ்வரி, இளவரசு போன்றோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். அனைவரின் கதாபாத்திரமும் கச்சிதமாக பொருந்தி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
படக்குழு: இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்க, பாபுலு அஜு ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். அர்ஜுன் பாபு படத்தொகுப்பு செய்ய, கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த 'தலைவர் தம்பி தலைமை' திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. படம் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 24 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு மேல் புக் மை ஷோ தளத்தில் புக் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











