பத்து நாளில் சம்பவம் செய்த ‘தலைவர் தம்பி தலைமையில்‘ .. படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஜீவா நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக படத்தின் இயக்குநர் கூறி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் ஜீவா நடித்த படத்திற்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இப்படம் 10 நாட்களில் நல்ல வசூலை அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்த படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. மலையாள இயக்குநர் நிதேஷ் இயக்கிய இந்த படத்தில் தம்பி ராமையா, இளவரசன், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.விஜய்யின் ஜனநாயன் படம் வெளியாக இருந்ததால், இப்படம் ஜனவரி 30ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகாததால் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 15ந் தேதி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

படத்தின் கதை: திருநெல்வேலி அருகேயுள்ள மாட்டிப்புதூர் என்கிற கிராமத்தில் தம்பி ராமையாவும் இளவரசும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஒருகாலத்தில் நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் இப்போது தீராத பகைக்காரர்களாக மாறிவிட்டனர். இந்த நேரத்தில் தான் இளவரசின் மகள் சௌமியாவுக்கு 10.30 மணிக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் தம்பிராமைய்யாவின் அப்பா இறந்துவிட, பகையுடன் இருக்கும் தம்பிராமைய்யா, கல்யாணம் நடக்கும் அதே நேரத்தில் அப்பாவின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்கிறார். ஊர் தலைவரான ஜீவா எவ்வளவோ சமாதானப்படுத்தியும் இருவரும் ஒத்துப்போகாததால், ஒரு பக்கம் திருமணக் கொண்டாட்டம், மறுபக்கம் மரண ஓலம். திருமணமும் இறுதி ஊர்வலமும் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடந்ததா, இல்லையா என்பதுதான் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் கதை.
10 நாள் வசூல்: இப்படத்திற்கு முதல் நாள் பெரும்பாலான திரையரங்குகள் கிடைக்காத போதும், இப்படம் முதல் நாளில் 1.5 கோடியை வசூலித்தது. மூன்றாம் நாளில் படம் 5.3 கோடி என இரட்டிப்பாக வசூலை அள்ளியது. இதையடுத்து படம் வெளியாகி 10 நாட்களை கடந்து உலகளவில் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











