விஜய்க்காக தளபதி 67 படத்தில் இணைந்த இளம் இயக்குநர்: லோகேஷ் கனகராஜ்ஜின் ஸ்மார்ட் ப்ளான்

சென்னை: விஜய்யின் 66வது படமான வாரிசு படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

'வாரிசு' படத்திற்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார்.

தளபதி 67 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இளம் இயக்குநர் ஒருவர் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைந்துள்ளார்.

விரைவில் தளபதி 67 ஷூட்டிங்

விரைவில் தளபதி 67 ஷூட்டிங்

விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் வாரிசு, அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் வாரிசு படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனராஜ்ஜின் ஸ்மார்ட் ப்ளான்

லோகேஷ் கனராஜ்ஜின் ஸ்மார்ட் ப்ளான்

ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனால், இப்போது உருவாகவுள்ள தளபதி 67 படத்திற்கு தறுமாறாக எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. விஜய்யுடன் நடிப்பவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், தளபதி 67 கண்டிப்பாக கேங்ஸ்டர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதற்கேற்றவாறு கதையை உருவாக்கி வரும் லோகேஷ் கனகராஜ், திரைக்கதைக்காக ஸ்மார்ட்டான டீமை அசைன் செய்துள்ளார்.

ஜில் ஜங் ஜக் இயக்குநர்

ஜில் ஜங் ஜக் இயக்குநர்

லோகேஷ் கனகராஜ்ஜின் படங்களில் இயக்குநர் ரத்னகுமார் கண்டிப்பாக இருப்பார் என்பது தெரிந்ததே. லோகேஷின் கதைகளை செம்மையாக மெருகேற்றுவதில் ரத்னகுமாரின் பங்கு பெரிது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 67 படத்திற்காக இளம் இயக்குநர் ஒருவரும் லோகேஷ் கனகராஜ்ஜுடன் கூட்டணி வைத்துள்ளாராம். சித்தார்த் நடித்த ஜில் ஜங் ஜக் படத்தின் மூலம் பிரபலமானவர் தீரஜ் வைத்தி. இவர்தான் தற்போது தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைந்துள்ளாராம்.

காமெடிக்கு கியாரண்டி தான்

காமெடிக்கு கியாரண்டி தான்

தீரஜ் வைத்தி இயக்கியிருந்த 'ஜில் ஜங் ஜக்' படத்தில் டார்க் ஹூயுமர் காமெடி செம்ம தூக்கலாக இருக்கும். படம் முழுக்கவும் டார்க் ஹ்யூமர் காமெடியில் அமர்க்களம் செய்திருப்பார் தீரஜ் வைத்தி. இந்நிலையில், 'தளபதி 67' படத்தில் காமெடி போர்ஷனை தீரஜ் வைத்தி தான் எழுதவுள்ளதாகக் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் பின்னணியில் ஆக்சன் படமாக இருந்தாலும் தளபதி 67 படத்தில் காமெடியும் இருக்கும் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ், ரத்தினகுமார், தீரஜ் வைத்தி மூவரும் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X