»   »  அரண்மனை 2 சரிந்தது.... விறு விறு வசூலில்... ஜில் ஜங் ஜக், இறுதிச் சுற்று!

அரண்மனை 2 சரிந்தது.... விறு விறு வசூலில்... ஜில் ஜங் ஜக், இறுதிச் சுற்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வெளியான சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக் மற்றும் மாதவனின் இறுதிச்சுற்று ஆகிய படங்கள் சென்னை பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகின்றன.

அதே நேரம் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் அதகளம் செய்து வந்த சுந்தர்.சியின் அரண்மனை 2 புதிய படங்களின் வரவால் வசூலில் சரிவை சந்தித்து வருகிறது.


கடந்த வாரம் வெளியான ஜில் ஜங் ஜக், வில் அம்பு, அஞ்சல மற்றும் இறுதிச்சுற்று, அரண்மனை 2, விசாரணை ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை இங்கே காணலாம்.


ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

கடந்த வாரம் வெளியான சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக் சென்னை பாக்ஸ் ஆபீஸில் இதுவரை சுமார் 74.09 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் கூட கடந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்திருக்கிறது ஜில் ஜங் ஜக்.


இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

படம் வெளியாகி 3 வாரங்கள் கடந்த நிலையிலும் கூட பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது மாதவனின் இறுதிச்சுற்று. கடந்த வாரத்தில் 34.78 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் 2 வது இடத்தை இப்படம் வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 2.70 கோடிகளை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது இறுதிச்சுற்று.


விசாரணை

விசாரணை

ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் கடந்த வாரம் 27.81 லட்சங்களை வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் 3 வது இடத்தை பெற்றிருக்கிறது வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம். வெளியான முதல் வாரத்தில் 38.88 லட்சங்களை இப்படம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது,


அஞ்சல

அஞ்சல

விமல், நந்திதா நடிப்பில் கடந்த வாரம் வெளியான அஞ்சல திரைப்படம் ரசிகர்களிடம் சராசரியான ஒரு வரவேற்பையே பெற்றுள்ளது. முதல் வாரத்தில் 11.27 லட்சங்களை அஞ்சல வசூல் செய்துள்ளது.தொடர்ந்து ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பதை விமல் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது படத்தைப் பார்த்தவர்களின் எண்ணமாக உள்ளது.


அரண்மனை 2

அரண்மனை 2

தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் அதகளம் செய்து கொண்டிருந்த அரண்மனை 2 திரைப்படத்தின் வசூல் புதிய படங்களின் வரவால் ஒரேயடியாக சரிந்துள்ளது. 3 வது வாரத்தில் 10.80 லட்சங்களை இப்படம் வசூல் செய்திருக்கிறது. அரண்மனை படத்தின் ஜெராக்ஸாக இருந்தபோதிலும் சென்னையில் இதுவரை மொத்தமாக 2.85 கோடிகளை வசூலித்திருக்கிறது அரண்மனை 2.


வில் அம்பு

வில் அம்பு

சுசீந்திரனின் தயாரிப்பில் ஹரிஷ், ஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் வெளியான வில் அம்பு முதல் வாரத்தில் 6.75 லட்சங்களை வசூல் செய்திருக்கிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதிலும் கூட பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வில் அம்பு எடுபடவில்லை.


பெங்களூர் நாட்கள்

பெங்களூர் நாட்கள்

பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்காக வெளியான பெங்களூர் நாட்கள் ஒரிஜினலைப் போல வசீகரிக்கவில்லை என்பது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. கடந்த வாரம் பெங்களூர் நாட்கள் 3.61 லட்சங்களை மட்டுமே வசூலித்திருக்கிறது. சென்னையில் இதுவரை 83.30 லட்சங்களை வசூல் செய்திருக்கும் இப்படம் வரும் வாரங்களில் திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டு விடலாம் என்பது விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது.


வரும் வாரங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது மேலே பார்த்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம், தலைகீழாக மாறலாம் என்பது
குறிப்பிடத்தக்கது.English summary
Box Office: Siddharth's Jil Jung Juk and Madhavan's Irudhi Suttru both movies very well at Chennai Box Office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos