கலக்கல் குத்தாட்டம்... ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஜெட்டி படத்தின் குத்துப்பாடல்
ஐதராபாத் : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது ஜெட்டி படம்
நந்திதா ஸ்வேதா லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்தில் குத்துப்பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையில் உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது.

ஜெட்டி படம்
மான்யம் கிருஷ்ணா, நந்திதா ஸ்வேதா லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜெட்டி. வர்தின் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேணு மாதவ் தயாரித்துவரும் இந்த படத்தை இயக்கியுள்ளார் சுப்ரமணியம் பிட்சுகா. கார்த்திக் கொடகண்டலா இசையமைத்துள்ளார்.

வைக்கம் விஜயலஷ்மி பாடல்
இந்த படத்தின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வைக்கம் விஜயலஷ்மி பாடியுள்ள ஜில் ஜில் என்ற அந்த பாடல் குத்து நம்பராக வெளியாகியுள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் வெர்ஷனின் ஜில்ஜில் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்
இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் நோபல் நடனம் அமைத்துள்ளார். தமிழின் பல குத்துப் பாடல்களை நினைவுப்படுத்தினாலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இந்த பாடல். கடந்த மே மாதத்திலேயே இந்த படம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

சிறப்பான லிரிக் வீடியோ
இந்நிலையில் தற்போது படத்தின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களை சூடேற்றி படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதைக்களமான மீனவர் வாழ்க்கை
மீனவர்களின் வாழ்க்கையை உலகமயமாக்கல் எவ்வாறு பாதித்துள்ளது என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவை இந்த படத்தில் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் சுப்ரமணியம் பிட்சுகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











