ரஜினி ரேஞ்சுக்கு 'ஜில்லா' விஜய்க்கு பிரமாண்ட ஓபனிங் சாங்
சென்னை: ஜில்லா படத்தில் வரும் ஓபனிங் பாடல் மிகவும் பிரமாண்டமாக இருக்கப் போகிறது.
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா பொங்கல் விருந்தாக வருகிறது. இந்த பொங்கல் தளபதி பொங்கல் என்று விஜய் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
இந்நிலையில் ஜில்லா படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

ஓபனிங் பாடல்
ஜில்லா படத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் பாடல் மிக பிரமாண்டமாக இருக்குமாம். இந்த பாடலில் விஜய்யுடன் மோகன்லாலும் வருவாராம்.

1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்
ஹீரோ அறிமுக பாடலில் விஜய்யுடன் 80 டான்சர்கள் மற்றும் 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் ஆடுகிறார்களாம். இந்த பாடலை பொள்ளாச்சியில் படமாக்குகிறார்களாம்.

எஸ்.பி.பி.
ஓபனிங் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஷங்கர் மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளார்கள். எஸ்.பி.பி.யின் தேன் குரல் எந்த ஹீரோவுக்கும் கை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டை
ஜில்லா படத்தில் வரும் ஒரு சண்டை காட்சியை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக படமாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ஜில்லா பிரமாண்டமாக உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











