புதிய சாதனை: கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் ஜில்லா - மோகன்லால் வெளியிடுகிறார்!

By Shankar

திருவனந்தபுரம்: இதுவரை எந்த தமிழ்ப் படமும் வெளியாகாத அளவு பிரமாண்டமாக கேரளாவில் வெளியாகிறது விஜய்யின் ஜில்லா.

கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் இந்தப் படத்தை மோகன்லாலே வெளியிடுகிறார்.

பொங்கல் படம்

பொங்கல் படம்

விஜய் - மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள ஜில்லா படத்தை நேசன் இயக்கியுள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு, வரும் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழகத்தில் 400 ப்ளஸ்

தமிழகத்தில் 400 ப்ளஸ்

தமிழகத்தில் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜில்லாவை வெளியிட முயற்சித்து வருகின்றனர்.

விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம்

விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம்

ஆனால் கேரளாவில் விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. போக்கிரி படத்திலிருந்தே அவரது எல்லா படங்களுக்கும் கேரளாவில் நல்ல ஓபனிங் வசூல்.

மலையாள விஜய் ரசிகர்கள்

மலையாள விஜய் ரசிகர்கள்

இந்த நிலையில், ஜில்லாவில் இன்னொரு ஹீரோவாக மலையாளத்தின் முன்னணி நாயகன் மோகன் லால் நடித்துள்ளார். இது படத்தின் கேரள ரிலீசுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்துள்ளது.

கேரளாவில் 300

கேரளாவில் 300

ஜில்லா படத்தை நேரடி தமிழ்ப் படமாகவே அங்கு 300 திரையரங்குகளில் மோகன் லால் வெளியிடுகிறார்.

சாதனை

சாதனை

தமிழ்ப் படம் ஒன்று இவ்வளவு அதிகமான அரங்குகளில் கேரளாவில் வெளியாவது இதுவே முதல் முறை. இதற்கு முன் வேறு எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இத்தனை அரங்குகள் கிடைக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X