»   »  வெளிநாடுகளில் அசத்தப் போகும் 'ஜில்லா'

வெளிநாடுகளில் அசத்தப் போகும் 'ஜில்லா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் ஜில்லா படம் வெளிநாடுகளில் அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் நாளை ரிலீஸ் ஆகிறது. தளபதி பொங்கலை கொண்டாட விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

ஜில்லா படம் வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. படத்திற்கு வெளிநாடுகளில் கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து வினியோகஸ்தர்களே வியக்கிறார்களாம்.

213 தியேட்டர்கள்

213 தியேட்டர்கள்

11 நாடுகளில் மொத்தம் 213 தியேட்டர்களில் ஜில்லா ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மலேசியாவில் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். இதையும் சேர்த்தால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கேரளாவில்

கேரளாவில்

ஜில்லா படத்தின் கேரள உரிமையை வாங்கியுள்ள மோகன்லால் தனது மாநிலத்தில் மொத்தம் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் ஹிட்

நிச்சயம் ஹிட்

விஜய், சூப்பர் குட் பிலிம்ஸ் சேர்ந்தால் அந்த படம் ஹிட்டாகும். இந்நிலையில் இந்த கூட்டணியின் உழைப்பில் உருவாகியுள்ள ஜில்லா நிச்சயம் மகத்தான வெற்றி பெறும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English summary
Jilla will get released in a large number of screens abroad. So far 213 screens have been finalised in 11 countries.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil