கேரளாவில் கல்லா கட்டிய 'ஜில்லா': வசூலில் புதிய சாதனை
திருவனந்தபுரம்: விஜய்யின் ஜில்லா படம் கேரளாவில் ரிலீஸான முதல் நாளில் ரூ. 2.62 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா படம் கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆனது. பொங்கல் விருந்தாக ரிலீஸான ஜில்லா விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் ஜில்லாவின் முதல் நாள் வசூல் விவரங்களை பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை
ஜில்லா படம் விடுமுறை அல்லாத நாளில் ரிலீஸான போதிலும் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. பலர் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க காலையிலேயே தியேட்டர்கள் முன்பு கூடியிருந்தனர்.

ரூ.7 கோடி
தமிழகத்தில் ஜில்லா படம் முதல் நாளில் மட்டும் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியும், நடிகர் விஜய்யும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளா
கேரளாவில் ஜில்லா படத்தை நடிகர் மோகன்லால் வெளியிட்டார். சுமார் 300 தியேட்டர்களில் ரிலீஸான ஜில்லா முதல் நாளில் மட்டும் ரூ.2.62 கோடி வசூல் செய்துள்ளது.

புதிய சாதனை
கேரளாவில் ஒரு படம் ரிலீஸாகி முதல் நாளில் ரூ.2.62 கோடி வசூல் செய்துள்ளது என்றால் அது ஜில்லா தான். இதன் மூலம் ஜில்லா கேரளாவில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணம் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருப்பதுடன், விஜய்க்கு நம் அண்டை மாநிலத்தில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தான்.


Click it and Unblock the Notifications











