தீபாவளிக்கு ஜில்லா 'ஃபர்ஸ்ட் லுக்', பொங்கலுக்கு படம் ரிலீஸ்
சென்னை: விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ஜில்லா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது என ஜித்தன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ஜில்லா படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் சண்டை காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜித்தன் ரமேஷ் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

தீபாவளிக்கு
ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது என்று ஜித்தன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஜீவா பிரார்த்தனை
தனது தந்தை தயாரிக்கும் ஜில்லா படம் ஹிட்டாக நடிகர் ஜீவா பழனி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா உரிமை
விஜய் படங்களுக்கு கேரளாவிலும் மவுசு உள்ளது. இதை அறிந்த மோகன்லால் ஜில்லாவின் கேரள உரிமையை வாங்கிவிட்டார். படத்தில் மோகன்லால் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார்.

பாடல்
ஜில்லா படத்துக்காக விஜய், ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். படத்தில் தாதாவின் மகனான விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











