ஜில்லா, வீரம்: கல கல கல ட்வீட்கள்
சென்னை: ஜில்லா மற்றும் வீரம் படம் பற்றி ட்விட்டரில் உலா வரும் சில காமெடிகளை படித்து சிரித்துவிட்டு போங்களேன்.
பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டு படங்களும் நல்ல வசூலை பார்த்து வருகின்றன.
இந்நிலையில் வீரம் மற்றும் ஜில்லா படங்கள் குறித்து ட்விட்டரில் சிலர் காமெடியாக போஸ்ட் செய்துள்ள சில செய்திகள் உங்களுக்காக.

கோமா
உங்க பையனை பொறுப்பில்லாம வளர்த்திருக்கீங்க. ஜில்லா பார்த்த கையோட வீரம் பாத்திருக்கான். இப்ப கோமால கடக்கான். 24 பிறகு தான் எதுவும் சொல்ல முடியும்.

ஆணிகள்
ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

வீரமா, ஜில்லாவா?
பொங்கல் அன்னக்கி போன் போட்டு பால் பொங்கிருச்சானு கேக்காம வீரமா ஜில்லாவானு கேக்குதுங்க #வாய்க்குள்ள கத்திய விட்டு சுத்தனும்.

மார்க்
நான் மார்க் கூட, நீ மார்க் கூடனு தல தளபதி ரசிகர்கள் சண்டை போட்டுகிறாங்க! நீங்க 2 பேருமே பெயில் ஆயிருக்கீங்க அப்ரசண்டிகளா! #ஜில்லா #வீரம்.


Click it and Unblock the Notifications











