ஜில்லா, வீரம் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

By Shankar

விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வந்துள்ளன.

ஜில்லா செம வசூல்

ஜில்லா செம வசூல்

அதன்படி 1200 அரங்குகளில் உலகெங்கும் வெளியாகியுள்ள ஜில்லா முதல் நாளில் மட்டும் ரூ 11 கோடி வசூலித்துள்ளது. விஜய் படங்களில் வேறு எந்தப் படமும் இந்தத் தொகையை வசூலித்ததில்லை.

வீரமும் நல்ல வசூல்தான்

வீரமும் நல்ல வசூல்தான்

கிட்டத்தட்ட இதே அளவு திரையரங்குகளில் வெளியாகியுள்ள அஜீத்தின் வீரம், முதல் நாளில் மட்டும் ரூ 9.36 கோடிகளை வசூலித்துள்ளது.

கோயிங் ஸ்டெடி

கோயிங் ஸ்டெடி

இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களிலும் இரு படங்களின் வசூலும் மிகவும் ஸ்டெடியாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் கூறுகின்றன.

கேரளாவில் கலக்கல் வசூல்

கேரளாவில் கலக்கல் வசூல்

கேரளாவில் ஒரு நேரடி தமிழ்ப் படம் கூட வசூலிக்காத அளவுக்கு ஜில்லாவின் முதல் நாள் வசூல் அமைந்துள்ளது.

அங்கு இந்தப் படம் ரூ 2.62 கோடியை முதல் நாளில் குவித்து கேரள திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் இன்னொரு ஹீரோ மோகன் லால் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மூன்று நாளும்

மூன்று நாளும்

இரு படங்களும் கடந்த மூன்று தினங்களாக தினசரி ஆறு காட்சிகள் திரையிடப்படுகின்றன. முதல் மூன்று நாளுமே கிட்டத்தட்ட 100 சதவீத பார்வையாளர்களுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக இரு படங்களும் ஒடிக் கொண்டிருக்கின்றன. இன்று மாலைக்குள் முழுயான வசூல் விபரம் கிடைக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X