»   »  ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேப்டன், விஷால் டான்ஸ் ஆடியதை பார்த்தீங்களா? #Jimikkikammal

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேப்டன், விஷால் டான்ஸ் ஆடியதை பார்த்தீங்களா? #Jimikkikammal

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு விஷால், விஜயகாந்த், ஆதி ஆடும் வீடியோக்கள் அருமையாக உள்ளன.

மோகன்லால் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் ஒரிஜினல் வீடியோவை விட ஷெரில் அன்ட் கோ ஆடிய வீடியோ தான் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஷெரிலுக்கு என்று தமிழக ரசிகர்கள் ட்விட்டரில் ஆர்மி துவங்கிவிட்டனர்.

ஏற்கனவே ஓவியா ஆர்மி வேறு உள்ளது.

தலைவி

தலைவி

ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோவை பார்க்க தலைவி ஷெரில் தான் காரணம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதில் படங்களில் நடிக்க தயாராக இருப்பதாக ஷெரில் தெரிவித்துள்ளாராம்.

விஷால்

புரட்சி தளபதி விஷால் பெண் வேடம் அணிந்து ஆடியதை எடுத்து ஜிமிக்கி கம்மல் பாடலோடு கோர்த்துவிட்டுள்ளனர். சும்மா சொல்லக் கூடாது வீடியோ நச்சுன்னு இருக்கிறது.

ஆதி

மீசைய முறுக்கு படத்தில் ஆதி மாட்டிக்கிச்சு பாடலுக்கு ஆடியது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அவ்வளவு பொருத்தமாக உள்ளது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் ரவுண்டு வருகிறது.

விஜயகாந்த்

கண்ணுபடப் போகுதய்யா படத்தில் விஜயகாந்தும், ராதிகா சவுத்ரியும் சேர்ந்து ஆடிய டான்ஸ் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு என்றே ஆடியது போல் உள்ளது.

English summary
Videos of Vishal and Vijayakanth's version of Jimikki Kammal have caught the attention of fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil