Don't Miss!
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜிமிக்கி கம்மல் ஷெரில் சினிமாவுக்கும் வந்தாச்சு... யார் படத்துல தெரியுமா?
சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் வைரல் ஹிட்டடித்த 'ஜிமிக்கி கம்மல்' பாடலின் மூலம், கேரளாவைச் சேர்ந்த ஆசிரியைகளான ஷெரில் மற்றும் அன்னா எனும் இரண்டு இளம்பெண்கள் பிரபலமானார்கள். இந்தப் பாடலின் மூலம் ஷெரிலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Celebrate @anirudhofficial's birthday today with #SodakkuSongTeaser https://t.co/79OgQZIqrg #HappyBirthdayAnirudh pic.twitter.com/ynQGG6Ai6W
— Sony Music South (@SonyMusicSouth) October 15, 2017
சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும், தனக்கு நடிகர் சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' மிகவும் பிடிக்கும் எனவும் கூறியிருந்தார் ஷெரில். எனவே விரைவில் இவர் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பாக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில், அன்னா இருவரும் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று வெளியிடப்பட்ட 'சொடக்கு' பாடல் டீசரில் அவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பாடலின் டீசரில் நடித்திருப்பதன் மூலம் தனக்குப் பிடித்த நடிகரான சூர்யாவின் படத்தில் பங்கேற்றுவிட்டார் ஷெரில்.