ஜோதிகாவின் ‘ஜிமிக்கி கம்மல்’ டான்ஸ்.. காற்றின் மொழியில் பார்க்கலாம்!

காற்றின் மொழி படத்தில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஜோதிகா நடனமாடியுள்ளார்.

Recommended Video

ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்...காற்றின் மொழியில் பார்க்கலாம்!- வீடியோ

சென்னை: காற்றின் மொழி படத்தில் ஜோதிகா, 'ஜிமிக்கிக் கம்மல்' பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலுக்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. பொதுமக்களும் குழுவாக இப்பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர்.

இந்நிலையில், இப்பாடலின் உரிமையைப் பெற்று, காற்றின் மொழி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ரீமேக்:

ரீமேக்:

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடித்துள்ள படம் காற்றின் மொழி. மொழி' படத்துக்குப் பிறகு ராதாமோகன் - ஜோதிகா மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு' படத்தின் ரீமேக் தான் இப்படம். பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

ரீஎண்ட்ரி:

ரீஎண்ட்ரி:

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அவர் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்படத்தில் அவருடன் விதார்த் , லட்சுமி மஞ்சு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

அக்டோபர் ரிலீஸ்:

அக்டோபர் ரிலீஸ்:

இப்படத்தில் சிம்பு கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ட்ரெய்லர் செப்டம்பர் மாதத்திலும், அக்டோபர் 18-ம் தேதி வெளியீடாக ‘காற்றின் மொழி' திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்திருக்கிறது.

ஜிமிக்கி கம்மல் பாடல்:

ஜிமிக்கி கம்மல் பாடல்:

இந்நிலையில், இப்படத்தில் கடந்தாண்டு மலையாளத்தில் ரிலீசாகி தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடல் இடம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X