»   »  ஹாலிவுட் லெவலுக்குப் போன ஜிமிக்கி கம்மல்!

ஹாலிவுட் லெவலுக்குப் போன ஜிமிக்கி கம்மல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'ஜிமிக்கி கம்மல்'-ஹாலிவுட் நடிகருக்கு பிடித்துப் போனது-வீடியோ

சென்னை : மோகன்லால் நடிப்பில் ஓணம் தினத்தன்று வெளியான திரைப்படம் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்'. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'ஜிமிக்கி கம்மல்' என்ற பாடலின் வீடியோவை, படத்தின் ரிலீஸுக்கு முன்னரே வெளியிட்டிருந்தனர்.

இந்தப் பாடல் கேரள மக்கள் தாண்டி பெரும்பாலானோருக்கும் பிடித்திருந்தது. இந்தப் படத்தைப் ப்ரொமோட் செய்வதற்காக 'ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்' ஒன்று தொடங்கப்பட்டது.

எர்ணாகுளத்தில் இருக்கும் புனித தெரசா கல்லூரி மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து ஓணம் திருநாளைக் கொண்டாடும் வகையில், இந்த 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு குழுவாக நடனம் ஆடினர்.

வைரலான வீடியோ :

வைரலான வீடியோ :

அதை வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர். கேரள இளம் பெண்கள் நடனம் ஆடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அது பலருக்கும் பிடித்துப்போக இணையத்தில் ட்ரெண்டானது.

ட்ரெண்ட் :

ட்ரெண்ட் :

அந்த வீடியோவைப் பார்த்து பலரும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினரோடு நடனமாடி அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து 'ஜிமிக்கி கம்மல்' என புது ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர்.

ஹாலிவுட் :

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஜிமிக்கி கம்மல் பாடலின் வீடியோவை ஜிம்மி கிம்மல் என்ற ஹாலிவுட் பிரபலத்திற்கு ஷேர் செய்து இந்தப் பாடலை நீங்கள் கேட்டீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், இப்போது வரை இல்லை, ஆனால் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.

ஜிம்மி கிம்மல் :

ஜிம்மி கிம்மல் :

ஜேம்ஸ் கிம்மல் என்கிற ஜிம்மி கிம்மல் அமெரிக்க சினிமாவில் காமெடியனாக, எழுத்தாளராக, தயாரிப்பாளராக, தொகுப்பாளராக எனப் பல துறைகளில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A video made by Kerala girls to the song 'Jimmikki Kammal' are going trend now. This song has gone to the Hollywood level by Twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos