twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜியோ சாவனில் டாப் 5 தமிழ் இசை கலைஞர்கள்... ராக் ஸ்டார் அனிருத்துக்கு முதலிடம்!

    |

    சென்னை: ஜியோ சாவன் இந்த ஆண்டின் டாப் 5 பாடல்கள், டாப் 5 ஆல்பங்கள் என லிஸ்ட்களை வெளியிட்டது.

    அதை தொடர்ந்து தற்போது டாப் 5 இசை கலைஞர்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

    3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு ரகளை! 3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு ரகளை!

    தமிழிலும் டாப் 5 தமிழ் இசை கலைஞர்களின் லிஸ்ட்டை வெளிவந்துள்ளது அதன் விவரங்கள் இதோ

    5வது இடம்

    5வது இடம்

    நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ. வி. பிரகாஷ் இந்த லிஸ்டில் 5வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டில் சூரரை போற்று படத்திலும் High and Dry, Crying Out என இரண்டு ஆங்கில பாடல்கள் பாடியும் பெரிய ஹிட் அடித்துள்ளார் ஜீ. வி. பிரகாஷ். ஜியோ சாவனில் இந்த ஆண்டு 41 மில்லியன் ஸ்ட்ரீம்ஸ்களை ஜீ. வி. பிரகாஷ் இசையமைத்த பாடல்கள் கடந்துள்ளது.

    4வது இடம்

    4வது இடம்

    லிட்டில் மாஸ்டிரோ யுவன் ஷங்கர் ராஜா இந்த லிஸ்டில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு யுவன் இசையில் பெரிதாக ஏதும் பாடல்கள் வெளி வரவில்லை என்றாலும் அவருடைய இசையில் 2018ல் வெளியான மாரி-2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் இந்த ஆண்டு பல சாதனைகளை படைத்தது. ஜியோ சாவனில் இந்த ஆண்டு 49.4 மில்லியன் ஸ்ட்ரீம்ஸ்களை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் கடந்துள்ளது.

    இசை புயல் 3வது இடம்

    இசை புயல் 3வது இடம்

    இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் இந்த லிஸ்டில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையில் இந்த ஆண்டு கோப்ரா படத்தில் இடம்பெற்ற தும்பி துள்ளல் பாடல், Dil Bechara படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது. ஜியோ சாவனில் இந்த ஆண்டு 77.6 மில்லியன் ஸ்ட்ரீம்ஸ்களை ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் கடந்துள்ளது.

    2-வது இடம்

    2-வது இடம்

    பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் இந்த லிஸ்டில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு தமிழில் வெளியான வானம் கொட்டட்டும் படத்திற்கு இசை அமைத்தும், தமிழில் பல பாடல்களையும் பாடியும், வழக்கம் போல பெரிய வரவேற்பை பெற்றார் சித் ஸ்ரீராம். இந்த ஆண்டு 78.1 மில்லியன் ஸ்ட்ரீம்ஸ்களை சித் ஸ்ரீராம் பாடிய/ இசையமைத்த பாடல்கள் கடந்துள்ளது.

    ராக் ஸ்டார் முதலிடம்

    ராக் ஸ்டார் முதலிடம்

    ராக் ஸ்டார் அனிருத் இந்த லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு பெரிய நடிகர்களின் படத்திற்கு இசையமைத்து பெரிய ஹிட் கொடுத்து உச்ச கட்ட ஃபார்மில் உள்ளார் அனிருத். இதை தொடர்ந்து கைவசம் 2 பெரிய படங்களுக்கு இசையமைக்க உள்ளார் அனிருத். இந்த ஆண்டு 124.9 ல் மில்லியன் ஸ்ட்ரீம்ஸ்களை அனிருத் இசையமைத்த பாடல்கள் கடந்துள்ளது.

    Recommended Video

    சினிமாவில் பாடல்களின் முக்கியத்துவம் குறைகிறது | MUSIC DIRECTOR GHIBRAN CHAT | FILMIBEAT TAMIL

    English summary
    JioSaavan release Top 5 tamil Music directors in 2020
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X