ஜித்தன் ரமேஷை மிதிச்சு கோபப்படுத்திய நிஷா.. இதுல கண்ணீர் வேற.. இவங்க அலப்பறை முடியல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ஜித்தன் ரமேஷை நிஷா மிதித்தது இன்று தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் கமல், ஹவுஸ்மேட்ஸுடன் விவாதிப்பதற்கு முன்பாக வெள்ளிக் கிழமை நடந்த சம்பவங்கள் ஒளிபரப்பப்பட்டன.
இதில் நிஷாவுக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் நள்ளிரவில் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் நிஷா ரமேஷை எல்லோர் முன்பும் அடித்ததும் மிதித்ததும் தெரியவந்துள்ளது.

என்ன பிரச்சனை
இதனால் கடுப்பான ரமேஷ் நிஷாவிடம் பேசாமல் அவாய்ட் செய்துள்ளார். தான் செய்த தவறை உணர்ந்த நிஷா நீண்ட நேரமாக தனியாகவே இருந்தார். இதனை கவனித்த ரியோ தனியாக படுத்திருந்த நிஷாவை எழுப்பி என்ன பிரச்சனை என கேட்டார்.

ரியோ பஞ்சாயத்து
அப்போது எந்த பிரச்சனையும் இல்லை என்று நிஷா கூற, அதனை ஏற்காத ரியோ, எங்களுக்கு உன்னை மிஸ் பண்ணுவது போல் உள்ளது. இந்நேரம் எங்களுடன் பேசி விளையாடிக் கொண்டிருப்பாய்.

குற்ற உணர்ச்சியாக
ஆனால் இப்படி தனியாக இருந்தால் என்ன நினைப்பார்கள் என கேட்க, அவரை மிதித்தது குற்ற உணர்ச்சியாக உள்ளது என புலம்பினார். நீ செய்தது தவறுதானே என ரியோ கூற, நான் அவரிடம் போய் பேசுகிறேன் என ரமேஷிடம் பேசினார் நிஷா.

அந்த உரிமை கொடுத்துள்ளேன்
நான் தப்பு செய்தால் அப்போதே என்னை அடித்து சொல்லலாமே அந்த உரிமையை நான் உங்களுக்கு கொடுத்துள்ளேனே என உணர்ச்சி பொங்க பேசினார். அதற்கு பதில் கூறிய ரமேஷ், டக்குன்னு சாரி கேட்டு ஓடிப்போ என்று கூறுகிறார்.

காட்டவே இல்லை
பிக்பாஸ் விட்டில் அவ்வப்போது பிஸிக்கல் வயலன்சுகளும் அரங்கேறி வருகின்றன என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் எது எப்போடா நடந்தது எங்களுக்கு காட்டவே இல்லையே என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











