Just In
- 6 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 6 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 6 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்!
சென்னை: போன வாரமும் இந்த வாரமும் நடந்த ஒய் பிளட் சேம் பிளட் டாஸ்க்கில் நல்லா ஓபி அடிச்ச பிக் பாஸ் போட்டியாளர்களை வெளுக்க ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ்.
கமல் சார் சன் டே ஆன சும்மா வந்து தடவிக் கொடுத்துட்டு போகிறார் என்பதை தெரிந்து கொண்ட பிக் பாஸ், 60 நாட்கள் ஆகிவிட்டது, இனி நாம் தான் களத்தில் இறங்க வேண்டும் என கோதாவில் குதித்துள்ளார்.
முதல் பலியெ ஜித்தன் ரமேஷ் தான் என்பது ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் 'அதை' கேட்டுவிட்டார்!

பங்களிப்பு என்ன
பிக் பாஸ் வீட்டில் நீங்கள் 60 நாட்கள் நல்லா படுத்துத் தூங்கியது போதும், உங்களுடைய பங்களிப்பு என்ன? வெளியே என்னையே ரசிகர்கள் கழுவி ஊத்துறாங்க, இந்த சீசன் ரொம்ப மொக்கைன்னு, நீங்களாவது என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்க, இல்லை இனிமேலாவது எதையாவது செய்ய முயற்சி பண்ணுங்க என்கிற ரீதியில் உங்களின் பங்களிப்பு என்ன? என்ற கேள்வியை பிக் பாஸ் கேட்டுள்ளார்.

ஆபிஸ் ரூம்
ஒவ்வொரு போட்டியாளரையும் ஆபிஸ் ரூம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்பது போல அழைத்து, நல்லா ஊமைக் குத்தா குத்தி அனுப்ப ஆரம்பித்து விட்டார் பிக்பாஸ். போட்டியாளர்களை வைத்தே, அவங்களை அவங்க வாயாலையே ரசிகர்கள் மத்தியில் அசிங்கப்படுத்த நல்ல ஒரு சான்ஸை உருவாக்கியது செம சூப்பர். இதுல உள்ள நடந்ததை வெளியே சொல்லக் கூடாது என்றும் சொல்லி அனுப்பியது ஹைலைட்.

முதல் பலி ஆடு
பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட நாட்கள் வெறும் மிக்சர் தின்னுக்கிட்டும், ஆடியன்ஸ் போலவே எந்த ஒரு டாஸ்க்கும் செய்யாமல் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த ஜித்தன் ரமேஷை முதல் ஆளாக உள்ளே அழைத்து பிரியாணிக்கு வெட்டுவதை போல பிக் பாஸ் வெட்டி விட்டார்.

பாத்ரூம் கழுவினேன்
ஜித்தன் ரமேஷை எப்போ கேட்டாலும், நான் பாத்ரூம் க்ளீன் பண்ணேன். எனக்கு ஹைஜீனிக் ரொம்ப முக்கியம் என்பதை மட்டுமே சொல்லி வருகிறார். மக்களை மகிழ்விக்க என்ன பண்ணீங்க இந்த 60 நாளில் என்ற கேள்விக்கும், நான் பாத்ரூம் கழுவினேன் என ரமேஷ் பேசி பிக் பாஸிடம் நல்லாவே பல்பு வாங்கினார்.

பேய் முழி
ஜித்தன் ரமேஷ் என்னத்த சொல்ல வந்தாலும், கேட் போட்டு மடக்கும் பிக் பாஸால் என்ன தான் டா சொல்வது என தெரியாமல் பேய் முழி முழிக்கத்தொடங்கிய ஜித்தன் ரமேஷை சமூக வலைதளங்களில் ஆன் தி ஸ்பாட் ரசிகர்கள் மிக்சர் தின்னி என கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். எதுவுமே பண்ணல என்பதை சொல்ல வேண்டியது தானே என்றும் பங்கம் பண்ணினர்.

பாலாவை ஜெயிச்சேன்
ஜித்தன் ரமேஷ் பாலாவை ஜெயித்தாரா? இல்லையா என்பதே இன்னமும் பஞ்சாயத்தில் தான் இருக்கு. கமல் சார் நாளைக்கு குறும்படம் போட்டுக் காண்பித்தால் தான் உண்மை வெளிவரும். இந்நிலையில், தனது தரப்பு செய்கையாக டஃப் போட்டியாளர் பாலாவை கேப்டன் டாஸ்க்கில் ஜெயித்து கேப்டன் ஆனது நான் செஞ்ச பங்களிப்பு என்றார். பிக் பாஸ் நீ கெளம்புப்பா என ஜித்தனை வெளியே அனுப்பி விட்டார்.