Bigg Boss Tamil 4: ஆளே அடையாளம் தெரியாம மாறிய ஜித்தன் ரமேஷ்.. 7வது போட்டியாளர் இவர் தானுங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகியுள்ள மற்றொரு ஹீரோ போட்டியாளர் நம்ம ஜித்தன் ரமேஷ்.
Recommended Video
தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் மகனான இவர் ஜித்தன், ஒஸ்தி, ஜெர்ரி, ஜித்தன் 2 உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.
சமீப காலமாக பெரிதாக திரைப்படங்களில் தலைக்காட்டாத ஜித்தன் ரமேஷ், தற்போது பிக்பாஸ் போட்டியாளராக நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளார்.

ஜித்தன் ரமேஷ்
நடிகர் ஜீவாவின் சகோதரரான இவர், வித்யார்த்தி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2005ம் ஆண்டு தமிழில் வெளியான ஜித்தன் படத்தில் ஹாலோமேனாக நடித்து கலக்கினார் ரமேஷ். அதன் பின்னர், ஜித்தன் ரமேஷ் என்றே அழைக்கப்பட்டார். அந்த படத்தில் சரத்குமார், பூஜா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன்
மது, ஜெர்ரி, நீ வேணும் டா செல்லம், மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஜித்தன் 2, ஒரு நடிகையின் வாக்குமூலம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு பாலிவுட்டில் சல்மான் கான் நடித்து ஹிட்டான தபங் படத்தை சிம்பு தமிழில் ஒஸ்தி என ரீமேக் செய்து நடித்து இருந்தார். அதில், அவரது சகோதரர் ஒஸ்தி பாலனாக ஜித்தன் ரமேஷ் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை அள்ளினார்.

7வது போட்டியாளர்
முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை தொடர்ந்து நடிகைகள் சனம் ஷெட்டி, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் வீட்டுக்குள் நுழைந்தனர். 7வது போட்டியாளராக நடிகர் ஜித்தன் ரமேஷ் நீல நிற கோட் சூட்டில் ஆளே அடையாளம் தெரியாமல் செம கெத்தாக வந்தார்.

வீடியோ காலில் ஜீவா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகோதரர் ஜித்தன் ரமேஷ் கலந்து கொண்டதற்கு வாழ்த்த நடிகர் ஜீவா வீடியோ கால் மூலம் பேசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த பிக்பாஸ் தமிழ் 4 சீசன் நிகழ்ச்சியில் கடும் போட்டியாளராக ஜித்தன் ரமேஷ் இருப்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பழையபடி சூப்பர் ஹீரோவாக ரமேஷ் மாறுவாரா? என்றும் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications