சம்யுக்தாவை அலேக்காய் தூக்கிய ஜித்தன் ரமேஷ்.. ஆட்டம் பாட்டத்துடன் களைக்கட்டிய பிக்பாஸ் ஜோடிகள்!
சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த மே மாதம் முதல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ரம்யா கிருஷ்ணனுடன் மோதலில்
இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்றிருந்த நடிகை வனிதா விஜயகுமார், தன்னை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட கூடாது என கூறி நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் மோதலில் ஈடுபட்டார்.

நிகழ்ச்சியிலிருந்து விலகிய வனிதா
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா ரம்யா கிருஷ்ணன் தன்னை துன்புறுத்தினார், அவமானப்படுத்தினார் என்றும் தன்னை பார்த்து பொறாமைப் படுகிறார் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

பட்டைய கிளப்பும் ரம்யா கிருஷ்ணன்
ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல விருப்பம் இல்லாத நடிகை ரம்யா கிருஷ்ணன், நோ கமெண்ட்ஸ் என ஒரே வார்த்தையில் முடித்தார். தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ரம்யா கிருஷ்ணன், ஆட்டம் பாட்டம் என பட்டையை கிளப்பி வருகிறார்.

ஹோம்ளி லுக்கில் செம க்யூட்
இந்நிலையில் வரும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தொடர்பான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. புரமோவின்படி இந்த வாரம் ரீகிரியேஷன் ரவுண்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சேலையில் செம ஹோம்ளி லுக்கில் படு க்யூட்டாக உள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பஞ்ச தந்திரம் பாடல்
மேலும் பஞ்ச தந்திரம் படத்தில் இடம்பெற்ற வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் பாடலுக்கு நடனமாடியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். கிறங்க வைக்கும் பார்வை மற்றும் பர்ஃபாமன்ஸால் மொத்த பேரையும் சொக்க வைத்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

அப்பன் பண்ண தப்புல
இதில் நிஷாவும் மோகன் வைத்யாவும் தெனாலி படத்தில் இடம்பெற்ற இன்ஜிருங்கோ பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதேபோல் ஜித்தன் ரமேஷும் சம்யுக்தாவும் திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற அப்பன் பண்ண தப்புல பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

சம்யுக்தாவை அலேக்காய் தூக்கி
இதில் ஒரு கட்டத்தில் சம்யுக்தாவை அலேக்காய் தூக்கி கழுத்துக்கு மேல் வைத்துள்ளார் ஜித்தன் ரமேஷ். இதனை பார்த்து மொத்த செட்டும் ஆடிப்போயுள்ளது. இதேபோல் மற்ற ஜோடிகளும் மிரட்டியுள்ளனர். புரமோவை பார்க்கும் போதே இந்த வாரம் அட்டகாசமாக இருக்கும் என தெரிகிறது.

நேரடியாக டாப் சிக்ஸுக்குள்
மேலும் இந்த வாரம் பெஸ்ட் பர்ஃபார்மன்ஸ் கொடுக்கும் ஒரு ஜோடி நேரடியாக டாப் சிக்ஸுக்குள் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புரமோவை பார்த்த நெட்டிசன்களும், இப்போதுதான் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை பார்க்க சிறப்பாக இருக்கிறது என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











