Jithan Ramesh - பாலா படத்திலிருந்து தூக்கப்பட்ட நடிகர் - பிரபல நடிகரின் அண்ணனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

சென்னை: Jithan Ramesh (ஜித்தன் ரமேஷ்) பாலா இயக்கிய அவன் இவன் படத்திலிருந்து ஜித்தன் ரமேஷையும், ஜீவாவையும் தூக்கியிருக்கும் சம்பவம் தெரியவந்திருக்கிறது.

பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரியின் மகன்கள் ரமேஷும், ஜீவாவும். ஜீவா பிரபலமான நடிகராக அறியப்பட்டாலும் அவரது சகோதரர் ரமேஷ் இன்னும் ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கிறார். அவர் நடித்ததில் ஜித்தன் படம் மட்டும் ஓரளவு வரவேற்பை பெற்றதால் ஜித்தன் ரமேஷ் என்றே அறியப்படுகிறார். ஜித்தன் படத்துக்கு பிறகு அவர் நடித்த எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை.

Jithan Ramesh Opens up About His Carreer

பிக்பாஸில் ஜித்தன் ரமேஷ்: படங்கள் சரியாக அமையாததால் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சூழலில் அந்த முயற்சியும் வீணானது. இப்படிப்பட்ட சூழலில் ஃபர்ஹானா படத்தின் மூலம் ஜித்தன் ரமேஷ் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்தாவது அவருக்கு ஒரு திருப்புமுனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஜித்தன் ரமேஷ் பேட்டி: இந்நிலையில் ஜித்தன் ரமேஷ் சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஃபர்ஹானா கதையை கேட்டதுமே படம் வெளியாகும்போது கண்டிப்பாக விமர்சனங்கள் வரும் என இயக்குநரிடம் சொன்னேன். நான் நினைத்த மாதிரியே விமர்சனம் எழுந்தது. அதை ஒரு பப்ளிசிட்டியாக நினைத்து கடந்துபோக வேண்டும். படத்தில் தப்பாக ஒரு காட்சிக்கூட இருக்காது.

பிரேக் கிடைக்கவில்லை: ஜித்தன் படத்துக்கு பிறகு எனக்கு எந்த திருப்புமுனையும் கிடைக்கவில்லை. ஃபர்ஹானாவில் எனக்கு பிரேக் கிடைக்கும். இதற்கு முன்பு தவறான கதைகளை தேர்வு செய்ததுதான் என்னுடைய சரிவுக்கு காரணமாக அமைந்தது. பெரும்பாலும் இப்போது இளைய தலைமுறையினர்தான் திரையரங்குகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு எது தேவையோ அதைத்தான் கொடுக்க வேண்டும். அவர்களை ஏமாற்றக்கூடாது.

Jithan Ramesh Opens up About His Carreer

பிக்பாஸில் ஏன் கலந்துகொண்டேன்: ஆறு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை. எனவேதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனேன். அங்கிருந்து வெளியே வந்த பிறகு ஏராளமான கதைகள் கிடைத்தன. ஆனால் எதுவுமே சரியாக இருக்கவில்லை. எதற்காக நேரத்தை வீணாக்க வேண்டும்; ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கலாமே என்று நினைத்துதான் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்துகொண்டேன்.

அவன் இவனிலிருந்து தூக்கினார்கள்: பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நானும், ஜீவாவும்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் கடைசியில் எங்கள் இருவரையும் தூக்கிவிட்டதாக அறிந்தேன். அந்த ஒரு படம்தான் எனக்கு வந்து பிறகு மிஸ் ஆனது. நம்மிடம் எல்லாமே இருக்கு எதை செய்தாலும் நிதானமாக செய் அவசரப்படாதே என்றுதான் ஜீவா என்னிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X