அப்பாடா.. ஒருவழியா ஃபார்முக்கு வந்த ஜித்தன் ரமேஷ்.. டாப் 6ல வரலாம்னு பாக்றீயா? பாலாவுக்கு வெளு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ள நிலையில் பாலாஜியை ஜித்தன் ரமேஷ் கடுமையாக விளாசியிருப்பது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 60 நாட்கள் ஆகிவிட்டது. பிக்பாஸ் வீட்டில் இதுவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வரும் நபர்களில் ஒருவர் ஜித்தன் ரமேஷ்.

கடந்த வார எவிக்ஷனின் போதே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என தகவல் பரவியது. ஆனால் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சம்யுக்தா வெளியேறினார்.

தப்பித்த ரமேஷ்

தப்பித்த ரமேஷ்

இதனால் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பானார் ஜித்தன் ரமேஷ். இதனை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகிவிட்டார் ஜித்தன் ரமேஷ். இதனால் இந்த வாரமும் நாமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டார் ஜித்தன் ரமேஷ்.

விளாசிய ரமேஷ்

விளாசிய ரமேஷ்

நேற்றைய கால் டாஸ்க்கிலேயே நிஷாவை படு பங்கமாக கலாய்த்தார். அவர்களின் கால் கான்வெர்சேஷன் செம காமெடியாக ரசிக்கும் படி இருந்தது. அதேநேரத்தில் டாப்புள் கார்டை அனிதாவுக்கு விட்டுக்கொடுத்தது குறித்தும் விளாசினார் ரமேஷ்.

ரேங்க் டாஸ்க்

ரேங்க் டாஸ்க்

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் செமயாய் ஸ்கோர் செய்துள்ளார் ஜித்தன் ரமேஷ். அதாவது நேற்றைய புரமோவிலேயே கால் டாஸ்க்கில் சிறப்பாய் செய்தவர்கள் யார் என்று 1 முதல் 13 வரை ரேங்க் கொடுக்க சொல்லி இருந்தார் பிக்பாஸ்.

ஆரி ஐடியா

ஆரி ஐடியா

இதுதொடர்பாக கார்டன் ஏரியாவில் வட்ட மாநாடு நடத்தினர் ஹவுஸ்மேட்ஸ். அப்போது ஆரி எந்த அடிப்படையில் தேர்வு செய்யலாம் என ஒரு ஐடியா கொடுத்தார். இதேபோல் பாலாஜியும் ஒரு ஐடியா கொடுத்தார்.

செம்ம ஃபார்ம்

செம்ம ஃபார்ம்

அதன் தொடர்ச்சியாக ஜித்தன் ரமேஷுக்கும் சனம் ஷெட்டிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் செம ஃபார்மில் இருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.

டாப் 6ல வரக்கூடாது

டாப் 6ல வரக்கூடாது

இந்த புரமோவில் பேசும் பாலாஜி, கேட்ட கேள்விக்கெல்லாம் ஒரு மணி நேரம் உட்காந்து ஏன் நான் பதில் சொல் வேண்டும். நானும் போன வச்சுட்டு போயிருப்பேனே என்கிறார் பாலாஜி. ஒருத்தர நாமினேஷனில் இருந்து சேவ் பண்றேன்னு சொல்லி சேவ் பண்ணதால அவங்க டாப் 6ல வரக்கூடாது என அதிரடியாய் பேசுகிறார் பாலாஜி.

டாப் 6ல வரலாம்னு பார்க்குறீயா?

டாப் 6ல வரலாம்னு பார்க்குறீயா?

இதனைக் கேட்டு செம கடுப்பாகிவிட்டார் வீட்டின் கேப்டனான ஜித்தன் ரமேஷ். பாலாஜி பேசுவதை அமைதியாக அமர்ந்திருந்து கேட்ட ஜித்தன் ரமேஷ், திடீரென எழுந்து, டாப் 6ல நீ வரணும்னு பார்க்குறீயா? மேலும் நீ முன்னாடி வந்து இப்படி நின்னு நின்னு பேசி டாப் 6ல வரலாம்னு பார்க்குறீயா என பாலாஜியை போலவே நடித்து காட்டுகிறார்.

பாலாஜியை கிழித்த ஜித்தன்

பாலாஜியை கிழித்த ஜித்தன்

தொடர்ந்து பேசிய ஜித்தன் ரமேஷ், உனக்கு என்ன மனஸ்தாபம் இருக்கோ அதையெல்லாம் சொல்லிட்டு நீ பாட்டுக்கு வச்சுட்ட.. அவரு நைட் ஃபுல்லா தூங்குனாறா இல்லையான்னு உனக்கு தெரியாது, அவர் பாட்டுக்கு புலம்பிக்கிட்டே இருக்காரான்னு தெரியல. நீ பாட்டுக்கு கேள்விக்கேட்டுட்டு போய்ட்ட என்று பாலாஜியை கிழித்து விடுகிறார்.

கோபமான ஷிவானி

கோபமான ஷிவானி

இதையெல்லாம் கேட்கும் ஆரி, ஆமாம் ஆமாம் என்பதாக தலையாட்டுகிறார். ஜித்தன் ரமேஷ் பேசுவதையெல்லாம் பார்த்து நக்கலாய் சிரிக்கிறார் பாலாஜி. பாலாஜியை லெப்ட் அன்ட் ரைட்டு வாங்குவதை பார்த்து கோபமாக எழுந்து செல்கிறார் ஷிவானி. இதையெல்லாம் பார்த்த அனிதா எல்லாரும் உட்காந்து பேசுங்க என்கிறார்.

Recommended Video

Cook with Comali Pavithra Lakshmi Biography | Ungalil Yaar Prabhudeva, Queen of Madras
வெளுத்துவிட்ட ரமேஷ்

வெளுத்துவிட்ட ரமேஷ்

இன்றைய முதல் புரமோவில், இந்த ரேங்க் டாஸ்க்கை வைத்து பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரளயம் ஏற்படவுள்ளது தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஜித்தன் ரமேஷ் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனம். சரியாக பேசுகிறார் என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X