For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்படியே நேர்மையாவே விளையாடுங்க ஆரி.. வெளியேறியதும் ஹவுஸ்மேட்களுடன் ஜித்தன் ரமேஷ் என்ன பேசினார்?

  |

  சென்னை: கன்ஃபெஷன் ரூமில் இருந்து எவிக்‌ஷன் ஆனதும் கமல் சாரை சந்தித்த ஜித்தன் ரமேஷ், அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்களுக்கு குட் பை சொன்னார்.

  பாலாவை தெளிய வைத்த ஆரி, இனி ஆட்டம் ஆரம்பம் | Bb4 Day 64 Highlights | Oneindia Tamil

  சனிக்கிழமை அன்று அன்பு கேங்கில் இருந்து வெளியேற்றப்படப் போவது சோமசேகரா? அல்லது ஜித்தன் ரமேஷா? என்கிற ட்விஸ்ட் வைத்து ரமேஷை வெளியேற்றினார் கமல்.

  வெள்ளிக்கிழமை இரவே ஜித்தன் ரமேஷ் வெளியேற்றம் லீக் ஆனதால், ரசிகர்களுக்கு இந்த வாரமும் கமலின் அந்த ட்விஸ்ட் வொர்க்கவுட் ஆகவில்லை.

  மூன்று பேர் மூன்று இடத்தில்

  மூன்று பேர் மூன்று இடத்தில்

  6 பேர் கேங் ஆரம்பித்து அர்ச்சனா கட்டிய குரூபிச கோட்டையை இந்த வாரம் செங்கல் செங்கலாக பிரித்து எடுக்க ஆரம்பித்து விட்டார் கமல். நிஷாவை போரிங் பர்ஃபார்மர் ஆக்கி கண்ணாடி சிறைக்குள்ளும், சோமசேகரை எவிக்‌ஷன் அறைக்குள்ளும், ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமிலும் அடைத்து வைத்தார் கமல்.

  நடிகையர் திலகம்

  நடிகையர் திலகம்

  தான் கட்டி வைத்த அன்பு கேங் கண் முன்னே நொறுங்குவதை பார்த்த அர்ச்சனாவால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. அவர் ஒரு மெதட் ஆக்டர் என்பதால் க்ளிசரினே தேவையில்லை. நினைத்தால் எத்தனை சொட்டு கண்ணீர் வேண்டுமோ அந்த அளவுக்கு வந்து விழும் நடிகையர் திலகம் போல அப்படி அழ ஆரம்பித்தார்.

  ரெஸ்ட் எடுத்தது போதும்

  ரெஸ்ட் எடுத்தது போதும்

  பிக் பாஸ் வீட்டில் 10 வாரங்களாக ரெஸ்ட் எடுத்தது போதும், ஏகப்பட்ட வாய்ப்புகள் உங்களுக்கு கொடுத்தாச்சு, எதையுமே பயன் படுத்திக் கொள்ளவில்லை. உங்களை சேவ் பண்ண ஏகப்பட்ட நல்ல போட்டியாளர்களை எல்லாம் வெளியே அனுப்பி நிகழ்ச்சியை பரபரப்பாக்கினோம் என்கிற மைண்ட் வாய்ஸில் கமல் பேசி ஜித்தன் ரமேஷை வெளியேற்றி விட்டார்.

  வேற ஒரு ரமேஷ்

  வேற ஒரு ரமேஷ்

  நீங்கள் இந்த பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போது, வேற ஒரு ரமேஷாக வெளியேற வேண்டும் என நினைத்ததை இப்போ சாதித்து விட்டீர்கள் என்று ஆறுதலுக்காக கமல் சொல்லி ஜித்தன் ரமேஷை வெளியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். பிக் பாஸ் ரமேஷ் என்று கூட ரசிகர்கள் சொல்லாமல், எப்போதும் நீங்கள் ஜித்தன் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  அகம் டிவி வழியே

  அகம் டிவி வழியே

  மற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்த ஆரத் தழுவி, அழுது புலம்பிய வழியனுப்புதல் ஜித்தன் ரமேஷுக்கு கிடைக்கவில்லை. அவரது உண்டியல் என்ன ஆனது. அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்களை சந்திக்கும் போது கூட, அதை உடைத்து அதில் இருக்கும் காயின்களை ஜித்தன் யாருக்கும் கொடுக்கும் வாய்ப்பையும் வழங்கவில்லை.

  நட்பு வட்டம்

  நட்பு வட்டம்

  அகம் டிவி வழியே அகத்தில் இருக்கும் ஹவுஸ்மேட்களை ஜித்தன் ரமேஷ் சந்திததும், அர்ச்சனா அழுது விட்டார். அன்பு கேங்கில் உள்ளவர்களான அர்ச்சனா, ரியோ ராஜ், கேபி, சோமசேகர் உள்ளிட்டவருக்கு முதலில் நன்றி சொல்லி விட்டு எல்லோரும் நல்லா கேம் ஆடுங்க என்றார். நிஷாவிடம் பேசும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

  நேர்மையாவே விளையாடுங்க

  நேர்மையாவே விளையாடுங்க

  ஆரி அர்ஜுனாவை பார்த்து பேசிய ஜித்தன் ரமேஷ், எப்போதுமே நீங்க நேர்மையாவே விளையாடுங்க, அது நிச்சயம் உங்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றார். ஆரியும் எழுந்து நின்று ஜித்தன் ரமேஷை பாராட்டினார். ஆரி ஆர்மியினர் மறுபடியும் சமூக வலைதளங்களில் நேர்மையின் சின்னம் ஆரி என டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

  மாற்றம் நல்லா இருக்கு

  மாற்றம் நல்லா இருக்கு

  உன்னை மாதிரியே சண்டை போட்டு விளையாடி இருக்கணும் பாலா என அவருக்கு முன்பாக எலிமினேட் ஆன வருத்தத்தை பதிவு செய்த ஜித்தன் ரமேஷ். உன்கிட்ட ஏற்பட்டு இருக்க மாற்றம் ரொம்பவே நல்லா இருக்கு.. அதை விட்றாதே.. அப்போ தான் பைனலுக்கு போவ என்கிற அட்வைஸ் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் ஜித்தன் ரமேஷ்.

  செம ஏவி

  செம ஏவி

  ஜித்தன் ரமேஷுக்கு போட்டுக் காட்டப்பட்ட ஏவி செம சூப்பராக இருந்தது. அதிலும், அவர் படுத்துத் தூங்கிய காட்சிகளும், அதற்கு போடப்பட்ட பிஜிஎம்மும் வேற லெவல். பிக் பாஸ் எடிட்டர் மனுஷனை அவ்ளோ ரசிச்சிருக்கார் என்றே தெரிகிறது. நிச்சயம் சோஷியல் மீடியாவில் கிடைத்த ஆதரவையும் வரவேற்பையும் பார்த்து ஜித்தன் ரமேஷ் சந்தோஷப்படுவார்.

  English summary
  JIthan Ramesh talks to the housemates after getting evicted from Bigg Boss house. Kamal praised Jithan Ramesh performance over all.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X