Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 8 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. சென்னைக்குள் என்ட்ரியாக முடியாமல் பரிதவிக்க வைத்த டிராபிக் ஜாம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரமேஷ்.. முதன்முறையாக பதிவிட்ட வீடியோ.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் சனிக்கிழமை வெளியேறிய ஜித்தன் ரமேஷ் முதன்முறையாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி ஜித்தன் ரமேஷ் டபுள் எவிக்ஷன் மூலம் வெளியேறினார்.

சூப்பர் செண்ட் ஆஃப் இல்லாமல், கன்ஃபெஷன் ரூமில் இருந்து கமல் பேசும் மேடைக்கு கொண்டு வரப்பட்டார்.
பிசிக்கல் வயலன்ஸ் ஆகிடும்.. எச்சரித்த ஆரி.. கேட்காமல் கத்திய அர்ச்சனா.. கலவரமான பிக் பாஸ் வீடு!

ஜித்தன் ரமேஷ்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் மூன்றாவது மகனும் நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ் செளத்ரி, ஜித்தன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், ஜித்தன் ரமேஷ் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். ஹாலிவுட்டில் வெளியான ஹாலோமேன் படத்தைத் தழுவியே ஜித்தன் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக ஜெயிக்கல
ஜித்தன் படம் ரமேஷுக்கு நல்ல அறிமுகமாக இருந்தபோதும், தொடர்ச்சியாக அவர் ஹீரோவாக நடித்த ஏகப்பட்ட படங்கள் சொதப்பிய நிலையில், ஹீரோவாக கோலிவுட்டில் அவரால் ஜெயிக்க முடியவில்லை. பிசினஸில் களமிறங்கி கலக்கி வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு போட்டியாளராக அசத்தல் என்ட்ரி கொடுத்தார் ஜித்தன் ரமேஷ்.

முதலும் கடைசியும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், விளையாட்டில் மிகப்பெரிய அளவில் ஈடுபாடு காட்டவே இல்லை ஜித்தன் ரமேஷ். அர்ச்சனாவின் அன்பு கேங்கில் ஐக்கியமாகி அப்படியே சொகுசு வாழ்க்கையை பிக் பாஸ் வீட்டில் கடந்த 70 நாட்களாக வாழ்ந்து விட்டு வெளியேறினார். முதல் முறை ஷிவானியுடன் ஜெயிலுக்குப் போன ஜித்தன் ரமேஷ், கடைசியாக அனிதாவுடன் சிறைக்கு சென்றார்.

கன்ஃபெஷன் ரூமிலிருந்து
மற்ற போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சூப்பரான செண்ட் ஆஃப் ஜித்தன் ரமேஷுக்கு கொடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் பாலாவுடன் போட்டிப் போட்டு கேப்டனாக ஜெயித்த நிலையிலும், ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமிலிருந்து கமல் பேசும் மேடைக்கு அழைத்து வந்து, ஹவுஸ்மேட்கள் ஆடி, பாடி, கட்டித் தழுவி, அழுது புலம்பி செய்யும் வழியனுப்புதல் இவருக்கு வாய்க்கவில்லை.
ஜித்தன் ரமேஷ் வீடியோ
70 நாட்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்த ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில், தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. காரில் பயணித்துக் கொண்டிருக்கும் ஜித்தன் ரமேஷ், தனக்கு இத்தனை நாட்களாய் சப்போர்ட் பண்ணிய அனைத்து ரசிகர்களுக்கும் ரொம்ப நன்றி என்று கூறினார்.

புது அனுபவம்
பிக் பாஸ் வீட்டில் இருந்த இத்தனை நாட்களும் தனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது என அந்த வீடியோவில் ஜித்தன் ரமேஷ் பேசியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ரசிகர்களுடன் எப்போதுமே இனி தான் தொடர்பிலே இருப்பேன் என்றும், ரசிகர்களின் மகத்தான ஆதரவு தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறியுள்ளார்.

சப்போர்ட் தேவை
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது எனக்கு எப்படி சப்போர்ட் பண்ணிங்களோ அதே போல இனிமேல் நான் நடிக்கப் போகும் படங்களுக்கும் உங்கள் ஆதரவு கண்டிப்பா தேவை. நீங்க அதை கொடுப்பீங்கன்னு நம்புறேன் என்றார். முன்னதாக நிஷா ஞாயிறு அன்று எவிக்ஷன் ஆன நிலையில், அவரது வீட்டில் நடந்த கோலாகல வரவேற்பு வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

நிஷாவை சந்திப்பீர்களா
வெளியேறும் போது நிஷாவை ஜித்தன் ரமேஷும், ஜித்தனை நிஷாவும் பார்க்க முடியாதபடி கமல் அவரை சிறையில் அடைத்து விட்டார். இந்நிலையில், ஜித்தன் ரமேஷின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், உங்கள் பாசக்கார சகோதரியான நிஷாவை வெளியே சந்திப்பீர்களா என்றும் சீக்கிரமே போட்டோ போடுங்க என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.