twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாப்புள் கார்டை விட்டுக்கொடுத்தற்கான காரணத்தை சொன்ன ரமேஷ்.. ஏமாந்த கதையை லாஜிக்கலாக பகிர்ந்த சனம்!

    |

    சென்னை: நாமினேஷன் டாப்புள் கார்டை தான் விட்டுக்கொடுத்த காரணத்தை கமலிடம் கூறினார் ஜித்தன் ரமேஷ்.

    கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடந்த கையோடு நாமினேஷன் டாப்புள் கார்டு டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.

    இதில் நாமினேட் ஆன 7 போட்டியாளர்களும் பங்கேற்றனர். அவர்களில், ஆண் போட்டியாளர்களான ஆரி, பாலாஜி, சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் விட்டுக்கொடுத்தனர்.

    ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல!ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல!

    டாப்புள் கார்டு டாஸ்க்

    டாப்புள் கார்டு டாஸ்க்

    பெண் போட்டியாளர்கள் மட்டுமே விடாபிடியாக இருந்து விளையாடினர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த கமல் டாப்புள் கார்டு விவகாரத்தை கையில் எடுத்தார்.

    பேசினதையே பேசி

    பேசினதையே பேசி

    அப்போது ஆண் போட்டியாளர்கள் விட்டுக்கொடுத்ததற்கான காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு முதலில் விடுத்தது நான்தான் என தனது விளக்கத்தை முன்வைத்தார் பாலாஜி. அவரை தொடர்ந்து பேசிய ரமேஷ், பேசினதையே பேசிக்கிட்டு இருந்தாங்க.

    எடக்கு மடக்கா கேள்வி

    எடக்கு மடக்கா கேள்வி

    ரொம்ப நேரம் ஆச்சு சார், எடக்கு மடக்கா கேள்வி கேட்குறாங்க. சாமியே கீழ வந்தாலும் பதில் சொல்ல முடியாது சார், அதான் சலிச்சுப்போய் வேண்டாம் என்று கூறி விட்டேன். 4 பேருக்கே 4 மணி நேரம் ஆச்சு, 7 பேருன்னா 7 மணி நேரம் ஆயிருக்கும் என்றார்.

    அனிதாவுக்கு பாராட்டு

    அனிதாவுக்கு பாராட்டு

    இதனைக் கேட்ட கமல் சில மணி நேரம் விளையாடவே சலிச்சுப்போச்சுன்னு சொல்றீங்க.. இது 100 நாள் விளையாட்டு என்றார். தொடர்ந்து பேசிய கமல் கடைசி வரை விடாபிடியாக இருந்து டாப்புள் கார்டை கைப்பற்றிய அனிதாவை பாராட்டினார்.

    பக்கு பக்குன்னு இருக்கும்

    பக்கு பக்குன்னு இருக்கும்

    அதன்பிறகு பேசிய சனம், கடைசியில் அந்த கார்டு எனக்கு தான் சார் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். அனிதாவும் நிஷாவும் விலகி விட்டார்கள் நான் மட்டும்தான் விலகாமல் இருந்தேன்.
    நாமினேஷனுக்கு வரவங்களுக்குதான் அந்த டென்ஷன் தெரியும். பக்கு பக்குன்னு இருக்கும் சார்.

    மிஸ் பண்ணிட்டேன்

    மிஸ் பண்ணிட்டேன்

    அப்படி இருக்கும் போது இப்படி ஒரு கோல்டன் வாய்ப்பு வந்தது. அதை நேரத்திற்காக மிஸ் பண்ணிட்டோமேன்னு தோனுச்சு சார். அவர்கள் இருவரும் வேண்டாம் என்று விலகிய பிறகு அந்த கார்டை நிஷா, அனிதாவுக்கு கொடுக்க முடியாது.

    அங்கே கேட்டிருக்கலாம்

    அங்கே கேட்டிருக்கலாம்

    லாஜிக்கலி அந்த கார்டு எனக்குதான் கிடைத்திருக்க வேண்டும், ஆனாலும் பரவாயில்லை என்றார். அதனைக் கேட்ட கமல் கிடைத்திருக்கலாம்.. இதே லாஜிக்கோடு நீங்கள் இதை அங்கேயே கேட்டிருக்கலாமே என்றார். அதற்கு எனக்கு அப்போ தோன்றவில்லை என்று கூறினார் சனம்.

    English summary
    Jithan Ramesh shared the reason why he withdraw from topple card task. Sanam also shared that she missed it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X