நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இப்போ மொத்தம் 13 பேர் தான் இருக்காங்க என்பதே, இந்த வரிசைப் பட்டியல் வந்த பிறகு தான் தெரிகிறதே..
அந்த அளவுக்கு 60 நாட்கள் ஆகியும் இன்னமும் கூட்டம் குறையாமல் நிறைந்திருக்கிறது.
பாலா தனக்கு டாப் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக யாரையும் மதிக்காமல் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், ஜித்தன் ரமேஷ் எழுந்து பேசி பாலாவின் கொட்டத்தை முழுவதுமாக அடக்கினார்.

பாலாவின் பேராசை
டாப் 3 இடங்களில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என நினைத்த பாலாஜி முருகதாஸ், தனது கருத்து என்றும், அதன் படி தான் போட்டியாளர்களை தேர்வு செய்து வரிசைப்படுத்த வேண்டும் என்றும் தனக்கு சாதகமான பாயின்ட்டுகளை அடுக்கிக் கொண்டு இருந்தார்.

யார் பேச்சையும் கேட்கல
மேலும், ஆரி, சனம் ஷெட்டி, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ் என யார் பேச்சையும் கேட்காமல், தனக்கு தேவையானதை மட்டுமே அடுக்கிக் கொண்டிருந்தார் பயில்வான். பாலாவின் பிளானை நன்றாக அறிந்து கொண்ட ஜித்தன் ரமேஷ், இது தப்பு பாலா, மத்தவங்க சொல்றதையும் கேளுங்க என அட்வைஸ் பண்ணார்.

டென்ஷனான ஜித்தன்
ஆனால், பாலா கேட்காமல் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததும் ஜித்தன் ரமேஷ் கடுப்பாகி விட்டார். நீ உனக்கான நியாத்தை மட்டுமே பார்க்காத, மத்தவங்க சொல்றதையும் கேளு என ஜித்தன் ரமேஷும் பாலாவிடம் எகிறி பேச ஆரம்பித்ததும், பாலா அப்படியே ஆடிப் போய் ஆஃப் ஆகி விட்டார்.

நைட்டெல்லாம் அந்த மனுஷன்
நீ பாட்டுக்கு அடுத்தவனை பேச விடாமல், குற்றச்சாட்டுகளை மட்டுமே அடுக்கி வச்சுட்டு போயிட்ட, நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. எப்படி புலம்புனாருன்னு தெரியுமா என ஆரி பட்ட மன சங்கடத்தை எடுத்து சொன்ன இடத்தில் ஜித்தன் ரமேஷ் செம ஸ்கோர் செய்தார்.

நீ கலக்கு தல
பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் வீட்டில் பண்ணும் அட்டூழியங்களுக்கு இப்படித் தான் திருப்பிக் கேட்டு ஆஃப் பண்ணனும், நீ கலக்கு தலை என்றும், வாண்ணா.. வாண்ணா.. இப்படியொரு ஜித்தன் ரமேஷை தான் கேம்ல எதிர்பார்க்குறோம். அந்த பயில்வானை சும்மா விடாத என சமூக வலைதளங்களில் ஜித்தனுக்கு செம ஃபேன் பேஸ் அதிகரித்து விட்டது.


Click it and Unblock the Notifications











