பாலாஜி மூடிக்கிட்டு அப்பவே ஜெயிலுக்கு போயிருக்கணும்.. வேற லெவலில் வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்!

சென்னை: பிக் பாஸ் கரெக்ட்டா பாலாஜி, சுச்சி, ரம்யா என மூன்று பேரை சொல்லும் போது, பாலாஜி எதுவுமே பேசாமல் முதல் ஆளாக ஜெயிலுக்கு போயிருக்கணும் என பேசி மறுபடியும் பாலாவுக்கு ஆப்பு வைத்துள்ளார் ஜித்தன் ரமேஷ்.

பிக் பாஸ் வீட்டில் தைரியமாக பாலாவை எதிர்த்து பேசக் கூடிய ஆளாக ஜித்தன் ரமேஷ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஆஜீத்தை அப்படி டார்ச்சர் பண்ணிட்டு, ஆஜீத் வயசுக்கு மரியாதை கொடுத்தான் என பாராட்டியது எல்லாம் ரொம்பவே ஓவர்.

ஆஜீத் கேப்டன்சி

ஆஜீத் கேப்டன்சி

கடந்த வாரம் ஆஜீத் கேப்டனாக இருந்தது குறித்து பேச ஆரம்பித்த கமல், ஹவுஸ்மேட்களிடம், ஆஜீத் எப்படியா பட்ட கேப்டன் என்று கேட்டார். ஏகப்பட்ட பேர் ஆஜீத்தை ஒரு நல்ல கேப்டன் என்றே பாராட்டினார்கள். சனம் ஷெட்டி, ஆஜீத் இந்த வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியா வீட்டை தலைமை தாங்கியது ரொம்பவே சூப்பரான விஷயம் என பாராட்டினார்.

மூக்கை நுழைத்த பாலா

மூக்கை நுழைத்த பாலா

ஆரி உள்ளிட்ட சிலர், ஆஜீத் கொஞ்சம் தடுமாறினார், மத்தபடி நல்லாவே கேப்டன்சி பண்ணார் என்றனர். உடனே, ஆஜீத்துக்கு வக்கீலாக மாறி பேச ஆரம்பித்த பாலா, ஜெயிலுக்கு அனுப்பும் நேரத்தில், ஆஜீத் தயங்கியது, வயதுக்கு மரியாதை கொடுத்தே தவிர, மற்றபடி ஏதும் இல்லை. அவன் நல்ல கேப்டன் என்று சாடையாக விளாசினார்.

ஜித்தன் விடுவாரா

ஜித்தன் விடுவாரா

பாலா மற்றவர்களை நோஸ் கட் பண்ணுவது போல சாடை மாடையாக சத்தம் போட்டால், உடனே பொட்டில் அடித்தது போல பேச ஜித்தன் ரமேஷ் ஆஜராகி விடுகிறார். ஏற்கனவே இப்படித்தான் போரிங் போட்டியாளர் யார் என கமல் கேட்ட போது கூட, பாலா தான் சார் என சரியாக அவருக்கு ஆப்பு அடித்தார்.

பிக் பாஸ் சொன்ன உடனே

பிக் பாஸ் சொன்ன உடனே

குறிப்பா பாலாஜி முருகதாஸ், சுசித்ரா, ரம்யா பாண்டியன் என மூன்று பேரில் இருவர் ஓய்வு அறைக்கு செல்ல வேண்டும் என பிக் பாஸ் சொல்லும் போதே, முதல் ஆளா பாலா, எழுந்து போயிருக்கணும், யோசிச்சு இருக்கவே கூடாது. அதிலும், ஆஜீத்தை போட்டு அந்த டார்ச்சர் பண்ணியிருக்கக் கூடாது என்று விளாசினார்.

கச்சேரி ஆரம்பம்

கச்சேரி ஆரம்பம்

இதுவரை பிக் பாஸ் வீட்டில் மிக்சர் தின்னியாக இருந்த ஜித்தன் ரமேஷ் தொடர்ந்து பாலாவை டார்கெட் பண்ணி தாக்க ஆரம்பித்துள்ள நிலையில், வரும் வாரத்தில் பாலாவுக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் சரியான சண்டை வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கச்சேரி ஆரம்பம்.

மத்தபடி ஓகே

மத்தபடி ஓகே

பாலா பண்ண டார்ச்சரால் தான் ஆஜீத், சற்றே தடுமாறினார். மத்தபடி கேப்டன் வேலையை ரொம்பவே சூப்பரா பண்ணார் என ஜித்தன் ரமேஷ் சொன்னதும், ஹவுஸ்மேட்கள் அனைவரும் ஆஜீத்தை பாராட்டினார்கள். பாலாவுக்கு வேட்டு வைத்த ஜித்தன் ரமேஷுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X