நீ ஏன் அவருக்கிட்ட சாரி சொன்ன.. பிக்பாஸ் வீட்டில் ரமேஷ் செய்த சில்ற வேலை.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தாளியாக வந்துள்ள ஜித்தன் ரமேஷ், ஆரியிடம் ஏன் மன்னிப்பு கேட்டாய் என்று பாலாஜியை ஏற்றி விடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதற்காக எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. எல்லோரும் பழையப்படி கேங்காக மாறியுள்ளனர்.

பெருமை படுகிறேன்

பெருமை படுகிறேன்

ஆரியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினாலும் அவர்கள் மனதில் வஞ்சகம் பழி வாங்கும் எண்ணமும் இருப்பது தெளிவாக தெரிகிறது. அர்ச்சனா, பாலாஜியிடம் ஆரியிடம் கோபப்பட்டதை நினைத்து பெருமைபடுகிறேன் என்றார்.

ஆரியை வம்புக்கு இழுத்து

ஆரியை வம்புக்கு இழுத்து

இதனை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா வந்த வேலையை ஆரம்பித்துவிட்டார் என விளாசினர். தொடர்ந்து ரியோவும் சம்பந்தமே இல்லாமல் ஆரியை வம்புக்கு இழுத்து கார்னர் செய்தார்.

பிரச்சனைகள் குறித்து

பிரச்சனைகள் குறித்து

இந்நிலையில் ஜித்தன் ரமேஷ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பெட்ரூமில் படுத்தப்படி ஜித்தன் ரமேஷ், கேபி, பாலாஜி ஆகியோர் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

 ஏன் சாரி சொல்ற?

ஏன் சாரி சொல்ற?

அப்போது ஆரி குறித்தும் பேசும், ரமேஷ் அவர் லேசாக உன்னை நோண்டி விடுகிறார். நீ வேகமாய் கத்தி விடுகிறாய். நீ கத்தினாலும் உடனே போய் ஏன் சாரி சொல்ற.. நீ சாரி சொல்வதால் உன் மீதுதான் தவறு என்பதை போல் ஆகிறது.

வயதுக்கு தான் மரியாதை

வயதுக்கு தான் மரியாதை

அதற்கு பதில் கூறும் பாலாஜி, நான் சாரி கேட்டதே அவருடைய வயதுக்கு மரியாதை கொடுத்துதான். அதில் ஒன்றும் தவறு இல்லை புரோ என்று ரமேஷுக்கு பதில் சொல்கிறார். ஆனால் ரமேஷ் அதனை ஏற்கவில்லை, நீ சாரி சொல்லியிருக்கக் கூடாது என்று கூறிக்கொண்டிருந்தார்.

சரின்னு சொல்லல..

சரின்னு சொல்லல..

தொடர்ந்து பேசிய பாலாஜி, கமல் சார் ஷோவுலேயே நான் சொன்னே. அவரு வயசுக்கு மரியாதை கொடுத்துதான் சாரி சொன்னேன். எந்த இடத்திலும் அவர் பேசியதை சரியென்று நான் சொல்ல மாட்டேன். போர்டு கொடுக்கும் போதும் அப்படி நான் சொல்லவில்லை.

அடி முட்டாள்..

அடி முட்டாள்..

இந்த வாரம் கூட கமல் சாரிடம் கெட்ட விஷயத்துக்கும் அவர் தான் மைண்டுக்கு வர்றார் நல்ல விஷயத்துக்கும் அவர்தான் மைண்டுக்கு வர்றார் என்றேன். அடிமுட்டாள் என்று சொன்ன போதும் பேக்கு என்று சொன்ன போதும் மரியாதையுடன் தான் சொன்னேன்.

பேசும் போதே யோசிக்கணும்

பேசும் போதே யோசிக்கணும்

அந்த டாப்பிக்கு பத்தி பேசினப்போதான்.. உடுய்யா என்றேன் எரிச்சலாகிவிட்டேன் என்று கூறுகிறார். அதற்கு பதில் சொல்லும் ரமேஷ், பேசும் போதே யோசிக்கணும், நீ கோபத்தில் கத்தி விடுகிறாய் என்கிறார்.

பொறாமை தாண்டவம்

பொறாமை தாண்டவம்

ஜித்தன் ரமேஷின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போதே அவரது முகத்தில் பொறாமை தாண்டவமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X