For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சனமை டார்கெட் பண்ண பாலாஜி.. நீ கூடத்தான் மூளை இல்லையான்னு கேட்ட.. மூக்கை உடைத்த ரமேஷ்.. செம புரமோ!

  |

  சென்னை: இன்றைய பட்டிமன்றம் டாஸ்க்கில் நேற்று நடந்த பிரச்சனைகளை வைத்தே ஹவுஸ்மேட்கள் பேசிய 3வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  வயசானவரை போடா.. வாடான்னு பேசுறாங்க என பாலாஜி சனம் ஷெட்டியை டார்கெட் பண்ண, ஜித்தன் ரமேஷ், நீ கூடத்தான் மூளை இல்லையான்னு கேட்ட என பாலாஜியின் மூக்கை ஜித்தன் ரமேஷ் நல்லாவே உடைச்சி விட்டுட்டார்.

  தேம்பி தேம்பி அழுத சுரேஷ் சக்கரவர்த்தி பட்டிமன்றம் டாஸ்க்கில் என்ன பேசப் போகிறார் என்பதே இன்றைய ஷோவின் ஹைலைட்டாக இருக்கும்.

  ரியோவுடன் சண்டை போட்ட ஷிவானி

  ரியோவுடன் சண்டை போட்ட ஷிவானி

  இதுக்கு மேலும், இந்த வீட்டில் சும்மா இருந்தால், வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்பதை அறிந்து கொண்ட ஷிவானி நாராயணன், நேற்றைய எபிசோடிலே பாலாஜி முருகதாஸ் உடன் ஓடிப்பிடித்து விளையாடி அசத்தினார். எனக்கு ஆடவும், விளையாடவும் மட்டும் தெரியாது, சண்டை போடவும் தெரியும் என டைனிங் டேபிளில் ரியோவுடன் சண்டை போட்டு முதல் புரமோவில் நிரூபித்து விட்டார். (promo 1 shivani photo)

  பட்டிமன்றம் டாஸ்க்

  பட்டிமன்றம் டாஸ்க்

  இந்த சீசனில் ஏகப்பட்ட போட்டியாளர்களின் வாய் காது வரை நீளும் என்பதால், சட்டென யோசித்த பிக் பாஸ், நாடா? காடா? டாஸ்க்கில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் பேசி தீர்க்க, பேசி பேசியே அடுத்த பிரச்சனைைய உருவாக்க இந்த பட்டிமன்றம் டாஸ்க்கை இன்று கொடுத்துள்ளார்.

  அர்ச்சனாக்கு அந்த தகுதி இருக்கா

  அர்ச்சனாக்கு அந்த தகுதி இருக்கா

  ஒரு சார்பாக பேசும் அர்ச்சனா அக்காவை தூக்கிக் கொண்டு போய், இன்றைய போட்டியில் நடுவராக வைத்துள்ளார் பிக் பாஸ். ஏற்கனவே நேற்றைய எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்தியை மட்டும் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டு, சனம் ஷெட்டியை அப்படியே விட்டுட்டீங்கன்னு ரசிகர்கள் விளாசி வருகின்றனர். இப்போ இது வேற..

  பெரிய பிரச்சனை

  பெரிய பிரச்சனை

  நடிகர் ரியோ ராஜ், தனது வீட்டில் உள்ள பிரச்சனைகளை விட பிக் பாஸ் வீட்டில் அப்படி என்ன பிரச்சனை வந்துடப் போகுதுன்னு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பட்டிமன்ற பேச்சில் பேசும் போது செமயா கதை விடும் புரமோ கட்டை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எல்லாத்துக்கும் காரணம் முதல் புரமோ சண்டை தான்.

  வாயைக் கொடுத்து புண்ணாக்கிய பாலாஜி

  வாயைக் கொடுத்து புண்ணாக்கிய பாலாஜி

  பாலாஜிக்கும் பட்டிமன்றத்துக்கும் என்னையா சம்பந்தம் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நேற்று ஒரு முதியவரை, அவன் இவன் என்றும், வாடா போடா என்றும் மரியாதை இல்லாமல் பேசுறாங்க, இதெல்லாம் குடும்பமா என தலைப்பை வைத்து தன் பங்குக்கு பேசி, அடுத்து வந்த ரமேஷிடம் வசமாக சிக்கி வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டார்.

  மூக்கை உடைத்த ஜித்தன்

  மூக்கை உடைத்த ஜித்தன்

  நேத்து நீ பேசினதை யாருமே கவனிக்கலைன்னு இப்போ இப்படி பேசுறியா.. அந்த சீன்ல நானும் அங்க தான் இருந்தேன். யோவ் உனக்கு என்னை வயசாக வயசாக மூளை எல்லாம் குழம்பிப்போச்சான்னு நீயும் அப்படித்தான் பேசின என ஓப்பனாக பேசி பாலாஜி முருகதாஸின் மூக்கை உடைத்து, முகத்தில் இருந்த மாஸ்க்கையும் கிழித்துத் தொங்கவிட்டார் நம்ம ஜித்தன்.

  அவன தூக்கு.. அவன கொல்லு

  அவன தூக்கு.. அவன கொல்லு

  புரமோவின் ஆரம்பத்தில் இது ஒரு போட்டிக் களம் தான் என ஆரம்பிக்கும் மொட்டை தல சுரேஷ், கடைசியில், அய்யோ இவரு சரியில்லை, அவரை நாமினேட் பண்ணு, அவன தூக்கு.. அவன கொல்லு என்பது போட்டி என இந்த வார எவிக்‌ஷனில் 9 பேர் தனக்கு எதிராக போட்டுள்ள ஓட்டுக்களையும் எவிக்‌ஷனில் தான் இருப்பதையும் வச்சி பேசி விளாசுகிறார். இன்னைக்கும் கச்சேரி இருக்கும் என்று தான் தெரியுது.

  English summary
  Balaji Murugadoss talks about Sanam Shetty yesterday arrogant words against Suresh. Jithan Ramesh breaks Balaji by asking same question on him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X