ஏன்டா தம்பி.. ஏன் அப்பா பேரெல்லாம் இழுத்த? பாலாஜியால் கடுப்பான ஜித்தன் ரமேஷ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், தனது அப்பா குறித்து பேசியதால் பாலாஜியிடம் கோபப்பட்டார் ஜித்தன் ரமேஷ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஆரியை முழுக்க முழுக்க தவறான நபராக காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு கால் செய்தார் பாலாஜி.
அப்போது பேசிய அவர், தன்னுடைய பிரச்சனையை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களின் பிரச்சனை குறித்தும் பேசினார். அந்த வகையில் ஜித்தன் ரமேஷ் மற்றும் அனிதா இடையில் நடந்த லெமன் பிரச்சனை எடுத்தார்.

புரெடியூசரின் மகன் என்பதாலா?
ஆரி கேப்டனாக இருந்த போது, அனிதா ஜித்தன் ரமேஷ் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து ஏன் அவரை கேட்கவில்லை? அவர் பெரிய புரெடியூசரின் மகன் என்பதாலா என்று கேட்டார். ஆனால் அதற்கும் ஆரியின் விளக்கத்தை கேட்கவில்லை பாலாஜி.

ஸ்மோக்கிங் ஏரியா
பாலாஜியின் இந்த கேள்வியால் ஆரி கடுப்பானாரோ இல்லையோ ரமேஷ் ரொம்பவே டென்ஷனாகிவிட்டார். ஸ்மோக்கிங் ஏரியாவில் அமர்ந்திருந்த பாலாஜியிடம் கார்டன் ஏரியாவில் இருந்த சோஃபாவில் அமர்ந்தப்படி அதுகுறித்து கேட்டார் ஜித்தன் ரமேஷ்.

ஏன்டா அப்படி கேட்ட?
ஏன்டா தம்பி.. நான் என்னடா பண்ணேன்.. அப்பா பேரு ஏன்டா இதுல வந்துச்சு.. நான்தான் முதல் நாளே ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டேனே என்னை அப்படி யாரும் பார்க்காதீர்கள் என்று, அப்புறமும் எதற்கு பெரிய புரெடியூசரின் மகன் என்று கேள்வி கேட்க பயப்படுறீங்களா என்று கேட்குற என்றார்.

பாலாஜிக்கு வெளு
ஏன் இப்படி நினைக்கிறீங்க.. ரொம்ப நேரமா நீ தனியா இருக்கும் போது இதைப்பத்தி கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அனிதா கேட்டத என்கிட்ட கேட்டிருக்கலாமே.. என்று பாலாஜியை வெளுத்தார்.
Recommended Video

திருப்தியாகவில்லை
உடனே வேண்டும் என்று நான் அதை கேட்கவில்லை என்று அந்தர் பல்டி அடித்தார் பாலாஜி, ஒரு ஃபுளோல வந்துவிட்டது என்றும் விளக்கம் கொடுத்தார். இருந்தபோதும் பாலாஜி லிஸ்ட் போட்டு கேட்டதை பார்த்த ஜித்தன் ரமேஷ், அவரின் பதிலால் திருப்தியாகவில்லை என்று தெரிந்தது.


Click it and Unblock the Notifications











