அர்ச்சு எனக்கே பயமா இருக்குடா.. எலி மூஞ்சி போஸ் கொடுத்த அர்ச்சனா.. பங்கமாக கலாய்த்த ஜித்தன் ரமேஷ்!

சென்னை: டாக்டர் பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ என குக் வித் கோமாளி தீபாவுடன் இருக்கும் புகைப்படத்தை பிக் பாஸ் அர்ச்சனா பதிவிட்டுள்ளார்.

அந்த போட்டோவில் எலியை போல மூஞ்சியை வித்தியாசமாக வைத்திருக்கும் அர்ச்சனாவை பார்த்து, அலறிப் போயுள்ளார் ஜித்தன் ரமேஷ்.

அனிதா சம்பத் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்துள்ளனர்.

பிக் பாஸ் அர்ச்சனா

பிக் பாஸ் அர்ச்சனா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன் மீது வீசப்பட்ட நெகட்டிவிட்டியை எல்லாம் அப்படியே பாசிட்டிவிட்டியாக மாற்றிக் கொண்டு பவுன்ஸ் பேக் ஆகி உள்ளார் அர்ச்சனா. தொடர்ந்து தனது மகள் சாராவுடன் இணைந்து க்யூட்டான வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு வைரலாக்கி வருகிறார்.

பாத்ரூம் டூர்

பாத்ரூம் டூர்

சமீபத்தில் தனது யூடியூப் சேனலான வாவ் லைஃபில் பாத்ரூம் டூர் வீடியோவை போட்டு சமூக வலைதளத்தையே அதிர வைத்தார் அர்ச்சனா. தனது மகள் சாராவுடன் பாத்ரூமில் என்ன என்ன பொருட்கள் உள்ளன என்று டூர் வீடியோ போட்டு 4 மில்லியன் வியூஸ்களையும் அள்ளினார். மோசமான கமெண்ட்டுகள் வரவே கமெண்ட் செக்‌ஷனை பிளாக் செய்துவிட்டனர். ஏகப்பட்ட ட்ரோல் வீடியோக்களும் யூடியூபில் வைரலாகி வருகின்றன.

எலி மூஞ்சி செல்ஃபி

எலி மூஞ்சி செல்ஃபி

இந்நிலையில், குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தீபாவுடன் டாக்டர் படத்தின் கோவா படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட செம க்யூட்டான செல்ஃபி புகைப்படத்தை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். எலி போல மூஞ்சியை வைத்துக் கொண்டு செம ஜாலியாக அர்ச்சனா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

எனக்கே பயமா இருக்குடா

எனக்கே பயமா இருக்குடா

அர்ச்சனா பதிவிட்ட இந்த போட்டோவை பார்த்த உடனே நடிகரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளருமான ஜித்தன் ரமேஷ், "அர்ச்சு எனக்கே பயமா இருக்குடா இந்த போட்டோவை பார்த்தா" என கமெண்ட் போட்டு அர்ச்சனாவை நெட்டிசன்களை விட பங்கமாக கலாய்த்துள்ளார்.

அனிதா சம்பத் கமெண்ட்

அனிதா சம்பத் கமெண்ட்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் சக போட்டியாளரான அனிதா சம்பத் இரு ஹார்ட்டீன்களை போட்டு அர்ச்சனாவின் இந்த வித்தியாசமான செல்ஃபி போட்டோவை லைக் செய்துள்ளார். ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்களும் அர்ச்சனாவின் இந்த போட்டோவை பார்த்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X