இந்த வாரமும் லீக்கான எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானா?

சென்னை: முதல் எலிமினேஷன் ரேகாவில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சுச்சி வரைக்கும் தொடர்ந்து பிக் பாஸ் எலிமினேஷன் லீக்காகி வருகிறது.

Recommended Video

Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil

இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் என்கிற தகவலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக பிக் பாஸ் வீட்டில் சுற்றித் திரிந்த ஜித்தன் ரமேஷ் தான் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுகிறாராம்.

சம்யுக்தா எஸ்கேப்

சம்யுக்தா எஸ்கேப்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து டம்மி மம்மி என பிக் பாஸ் ரசிகர்களால் கலாய்க்கப்படும் சம்யுக்தா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேற வாய்ப்பில்லை. அவருக்கு அதிகமான ஓட்டுக்கள் குவிந்துள்ளன என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

நிஷாவும் சேஃப் தான்

நிஷாவும் சேஃப் தான்

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான நிஷாவும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மாட்டார் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. ஆனால், பெரும்பாலான ரசிகர்கள், நிஷா அல்லது சம்யுக்தா வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.

ஜித்தன் ரமேஷ் தான்

ஜித்தன் ரமேஷ் தான்

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக பிக் பாஸ் வீட்டில், எந்த கவலையும் இல்லாமல், துணி துவைக்கக் கூட தனியா ஆள் வைத்து, எந்த கவலையும் இல்லாமல் சுகமா படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் ஜித்தன் ரமேஷ் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு வழியாக வெளியேறுகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

டேஞ்சர் ஸோனில்

டேஞ்சர் ஸோனில்

இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருப்பவர்கள் என்றால், அது ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா மற்றும் நிஷா தான். சம்யுக்தாவுக்கு ஷிவானி மற்றும் பாலா ரசிகர்கள் சப்போர்ட் அதிகம் உள்ளது. நிஷாவுக்கு விஜய் டிவியின் மிகப்பெரிய சப்போர்ட்டே இருக்கு, ஜித்தன் ரமேஷ் தான் கண்டிப்பாக இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என ஏகப்பட்ட பேர் கணித்தும் வருகின்றனர்.

செம ஜாலியா

செம ஜாலியா

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொள்ளாமல், ஒரு ரசிகராகவே நிகழ்ச்சியை வீட்டுக்குள் இருந்து விஐபி பாஸ் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது போல ஜித்தன் ரமேஷ் ஒவ்வொரு எபிசோடையும் ரசித்து, நம்மையும் ரசிக்க வைத்தார். அவர் படுத்து அழகா தூங்கும் போட்டோ தான் தற்போது பலரது டிபிக்களாகவும் மீம் மெட்டிரீயலாகவும் மாறி உள்ளன.

தலைவர் போட்டிக்குத் தேர்வு

தலைவர் போட்டிக்குத் தேர்வு

நேற்றைய நிகழ்ச்சியில் தலைவர் போட்டிக்குத் தேர்வான மூன்று பேரில் ஜித்தன் ரமேஷும் ஒருவர். ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ் ஆகிய இருவரில், அதிகபட்சமாக அடுத்த வாரம் கேப்டனாக பாலாஜி தான் ஆவார் என்று தெரிகிறது. இந்த வாரம் போன் டாஸ்க்கில் ஜித்தன் ரமேஷ் சூப்பராகவே பேசி ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் சண்டை போடாமல், அடுத்த வரை காயப்படுத்தாமல், எல்லா பிரச்சனைகள் பற்றி தெரிந்தாலும், தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் ஜித்தன் ரமேஷ் சேஃப் கேம் ஆடி வந்தார். பிக் பாஸ் டாப்புள் கார்டு டாஸ்க்கிலும் கடைசி வரைக்கும் போராடாமல், முன்னாடியே விட்டுக் கொடுத்ததும் அசத்தல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X