twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜாதி ராஜா... தெலுங்கில் வெற்றி பெற்ற சேரன் படம்!

    By Shankar
    |

    சேரனின் இயக்கத்தில் உருவாகி, நீண்ட காலமாக திரையைத் தொட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, தெலுங்கில் ராஜாதி ராஜா என டப் செய்யப்பட்டு கடந்த 24-ம் தேதி ரிலீஸானது.

    ஆச்சர்யம்... படத்துக்கு நல்ல வரவேற்பு. சுமார் 250 திரையரங்கில் வெளியிடப்பட்ட இந்தப் படம் வெற்றியையும், சேரனுக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்துள்ளது.

    JK Ennum Nanbanin Vaazhkai becomes hit in Telugu

    இங்கே நீண்ட நாட்களாக வெளியிட முடியாமல் இருந்து, இரண்டு முறை தேதி தள்ளி வைக்கப்பட்டு தற்போது டப்பிங் படமாக வெளியாகியுள்ள ராஜாதி ராஜாவுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருப்பதை தெலுங்கு சினிமா ஆச்சர்யமாகப் பார்க்கிறது.

    சர்வானந்த் - நித்யா மேனன் ஜோடியும் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

    தெலுங்கில் சர்வானந்த் ஏற்கனவே இரண்டு ஹிட்களைக் கொடுத்து, இப்போது மூன்றாவது ஹிட் கொடுத்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து சேரன் அவரது ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை தமிழில் திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார். ஏற்கனவே டிவிடியாக வெளியிடப்பட்டிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள் கூட, "இது நல்ல படம், இன்னும் நிறைய பேர் பார்க்கவில்லை. எனவே, மக்கள் பார்க்க தயாராக இருப்பார்கள். இப்போது சேரனுக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சரி செய்ய அது உதவும்," என முன் வந்துள்ளனர்.

    ஜுலை 15 ம் தேதி அளவில் இப்படத்தை வெளியிடலாம் என்று சேரனும் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் கபாலி வெளியாவது உறுதியானால், ஒரு வாரம் கழித்து வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம்.

    English summary
    Cheran's Rajathi Raja, the Telugu version of JK Ennum Nanbanin Vaazhkai has released recently and become box office hit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X