ஒத்த ரூவா கூட வாங்காமல் எல்.கே.ஜி. படத்தில் நடிச்சீங்களே ரித்தீஷ் சார்: ஆர்.ஜே. பாலாஜி
Recommended Video

சென்னை: ஒரு பைசா வாங்காமல் எல்.கே.ஜி. படத்தில் நடித்தார் ஜே.கே. ரித்தீஷ் என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி. படத்தில் ராமராஜ் பாண்டியனாக நடித்திருந்தார் ஜே.கே. ரித்தீஷ். மக்களின் மரியாதைக்குரிய அரசியல்வாதியாக அவர் நடித்திருந்தார்.
அவரின் நடிப்பு மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆர்.ஜே. பாலாஜி
நான் உங்களை மிஸ் பண்ணுவேன் சார். என்னை சொந்த தம்பி போன்று நடத்தினீர்கள். எல்.கே.ஜி. படத்தில் நடிக்க ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. நீங்கள் சிறந்த மனிதர். 3 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இருந்து உங்களை பிரித்த கடவுள் இரக்கமற்றவர் என்று ஆர்.ஜே. பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.
பணம்
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு சிறுவனின் சிகிச்சை மற்றும் படிப்பு செலவை ஏற்ற சிறந்த மனிதர் ரித்தீஷ். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நல்லவர்
நல்லவர்களை தான் கடவுள் சீக்கிரம் தன்னிடம் அழைத்துக் கொள்வாரோ?
நிரந்தரம்
ஜே.கே. ரித்தீஷின் மறைவு வாழ்க்கை நிரந்தரம் அல்ல என்பதை உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications











